Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு.. ரோகித்தால் நான் இங்கு இருக்கிறேன்.. டிராவிட் பிரியா விடை பேச்சு

பார்படாஸ் : என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி என்று இந்திய அணியின் வீரர்களுக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தன்னுடைய இறுதி உரையை நிகழ்த்தினார். ஒரு அணி வெற்றி பெறுவது என்றால் அந்த அணியில் உள்ள வீரர்கள் எவ்வாறு ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

பயிற்சியாளர்கள் எப்படி நட்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். இதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2007 உலக கோப்பையில் இந்திய அணி தோற்றத்திற்கு மோசமான பயிற்சியாளர் மற்றும் அணியில் நிலையற்ற தன்மை இருந்ததே காரணமாக இருந்தது.

t20 world cup india cricket team rahul dravid

ஆனால் அதை டிராவிட் தற்போது பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றி இந்தியாவுக்கு டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற போகும் ராகுல் டிராவிட், டிரெஸ்ஸிங் ரூமில் தன்னுடைய இறுதி உரையை பயிற்சியாளராக நிகழ்த்தினார்.

அப்போது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவில் என்னையும் ஒரு பங்காய் மாற்றியதற்கு நன்றி. உங்களை நினைத்து பெருமை கொள்கின்றேன். நான் எப்படி இந்த தொடரில் விளையாடினோம். நாம் எவ்வாறு உழைத்தோம். நாம் எந்தெந்த தியாகங்களை செய்தோம் என்பதை நினைத்து ஒட்டுமொத்த நாடுமே தற்போது பெருமை கொள்கிறோம்.

நீங்கள் இந்த சாம்பியன் அணியில் இடம்பெறுவதற்காக உங்களுடைய குடும்பத்தினர், உங்களுடைய மனைவி, உங்களுடைய பயிற்சியாளர் எவ்வளவு தியாகம் செய்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் பெருமைப்படும் ஒரு விஷயத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இந்த உலகக் கோப்பை வெல்வதற்காக எங்களுடன் சேர்ந்து நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனென்றால் அவர்தான் நவம்பர் மாதம் என்னை தொடர்பு கொண்டு பயிற்சியாளராக டி20 உலக கோப்பை வரை இருங்கள் என்று என்னை வற்புறுத்தினார். அதனால்தான் நான் இங்கு இருக்கின்றேன். ரோகித் சர்மாவுடன் பயிற்சியாளராக பணியாற்றுவதை மிகவும் பெருமையாகவும் நினைக்கின்றேன். அவருடன் இணைந்து செயல்பட்ட நேரத்தை மகிழ்ச்சியாக கருதுகின்றேன். ஒரு பயிற்சியாளர் கேப்டன் என்ற முறையில் நானும் ரோகித் சர்மாவும் பலமுறை ஒன்றாக நேரத்தை செலவழித்து உரையாடி இருக்கின்றோம்.

பல விஷயங்களை ஒத்துப் போயிருக்கிறோம். சில விஷயங்களில் ஒத்துப்போகாமல் இருந்திருக்கின்றோம். இந்த அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் பற்றி நான் தெரிந்து உங்களுடன் பணியாற்றி இருக்கின்றேன். உங்களுடைய நேரத்தை செலவிட்டதற்கு மிகவும் நன்றி. நம்மை அனைவரையும் ஒரு இயக்கத்திற்குள் கொண்டு வந்து நம்மை ஒருங்கிணைத்து ,நாம் கேட்டதெல்லாம் செய்து கொடுத்த பிசிசிஐக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ராகுல் டிராவிட் கூறினார்.

Story first published: Tuesday, July 2, 2024, 11:50 [IST]
Other articles published on Jul 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+