Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.12 கோடி போதாது.. கூடுதல் சம்பளம் கேட்கும் கம்பீர்.. ஸ்பெஷல் அதிகாரமும் தேவை.. கடுப்பில் ஜெய்ஷா

மும்பை : டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது பல மாற்றங்களை சந்திக்க இருக்கின்றது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்தது. அது மட்டுமல்லாமல் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பில்டிங் பயிற்சியாளர் தீலிப் ஆகியோரின் காலமும் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Gautam Gambhir Indian cricket team

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். இது வீரர்கள் வாங்கும் ஆண்டு சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பளத்தை விட கூடுதலாக தமக்கு வேண்டும் என கம்பீர் கேட்டு இருக்கிறார்.சம்பளம் கொடுப்பது பிசிசிஐக்கு பிரச்சனை இல்லை.

ஆனால் அது வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட டபுள் மடங்கு சென்றால் என்ன செய்வது என்ற ஒரு யோசனை பிசிசிஐ க்கு இருக்கிறது. ஆனால் முக்கிய காரணம் கம்பீரின் அடுத்த கோரிக்கை தான். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தமக்கு ஸ்பெஷல் பவர் வேண்டும் என கம்பீர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அணியின் தேர்வு மற்றும் பிளேயிங் லெவன் என எந்த வீரர்கள் இருக்க வேண்டும். வீரர்கள் தமக்கு 100% ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்திய அணியின் அடுத்த கேப்டன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தாம் முடிவு செய்ய அதிகாரம் வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அணியில் தாம் எடுக்கப் போகும் மாற்றத்திற்கு பிசிசிஐ நிர்வாகிகள் எந்த தலையிடையும் செய்யக்கூடாது என்றும் கம்பி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் டெஸ்ட்க்கு என ஒரு அணி, ஒருநாள் ,t20 போட்டிக்கு என ஒரு அணி வேண்டும் என்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். வீரர்களுக்கு தொடர்ந்து ஓய்வு வழங்கப்படாது என்றும் தான் சொல்லும் வீரர்கள் சொல்லும் தொடரில் விளையாட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இது சரிப்பட்டு வருமா என்று தான் தற்போது பிசிசிஐ யோசித்து வருகிறது.

Story first published: Tuesday, July 9, 2024, 16:01 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+