நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்றாரு.. அம்பையர் மீது ஐசிசியில் புகார் அளித்த இந்திய அணி!
மும்பை: இந்தியாவை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவரான வினீத் குல்கர்னி தொடர்ந்து தவறான தீர்ப்பளித்து வருவதாக ஐசிசியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 2 டி20 போட்டிகளிலும், கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது.

இந்திய மேனேஜ்மென்ட் புகார்
இந்தியா தோற்ற போட்டிகள் அனைத்திலும், நடுவராக பணியாற்றிய வினீத் குல்கர்னி, முக்கிய முடிவுகளின்போது பல முறை, தவறிழைந்தது பட்டவர்த்தனமாக தெரிந்தது. இதையடுத்து அவர் மீது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

டுமினி எஸ்கேப்
தர்மசாலாவில் நடந்த முதல் டி20 போட்டியில், ஆட்டத்தை மாற்றியமைத்தார் தென் ஆப்பிரிக்காவின் டுமினி. ஆனால் அவர் 2 முறை அருமையான எல்.பி.டபிள்யூ அப்பீலில் சிக்கியபோதும், வினீத் தப்பாக தீர்ப்பளித்து தப்பிக்கவிட்டுவிட்டார்.

தப்பான எல்.பி.டபிள்யூ
கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின்போது, அஸ்வினின் முதல் பந்திலேயே பாப் டுப்ளசிஸ் அவுட் ஆன நிலையில், அதையும் அவுட் இல்லை என தீர்ப்பளித்தார் வினீத். அந்த போட்டியில் இந்தியா சேஸிங் செய்தபோது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷிகர் தவானுக்கு தப்பான வகையில் எகான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின்போது, அஸ்வினின் முதல் பந்திலேயே பாப் டுப்ளசிஸ் அவுட் ஆன நிலையில், அதையும் அவுட் இல்லை என தீர்ப்பளித்தார் வினீத். அந்த போட்டியில் இந்தியா சேஸிங் செய்தபோது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷிகர் தவானுக்கு தப்பான வகையில் எல்.பி.டபிள்யூ அவுட் கொடுத்ததும் இதே வினீத்.ல்.பி.டபிள்யூ அவுட் கொடுத்ததும் இதே வினீத்.

தப்போ தப்பு
4 தவறுகளாவது பட்டவர்த்தனமாக தெரிந்து விட்ட நிலையில், வினீத் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டிஆர்எஸ்) நடைமுறைக்கு இந்திய வாரியம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நடுவர்களின் தீர்ப்புகள் இந்தியாவுக்கு பாதகமாக போய்க்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications