Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத மட்டும் மறந்துடுங்கப்பா.. 2022ம் ஆண்டு இந்தியாவின் 6 மோசமான ஆட்டங்கள்.. கண் கலங்க வைத்த தருணங்கள்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022ம் ஆண்டு நினைவில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிட வேண்டிய ஆண்டாக இருந்துள்ளது.

இந்த ஆண்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் இருந்து ராகுல் டிராவிட்டின் பயிற்சி என பல்வேறு புதிய மாற்றங்களுடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட்டு வந்தது என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இத்தனை மாற்றங்களை செய்தும், இந்திய அணி மோசமான அடிகளை வாங்கியுள்ளது.அந்தவகையில் இந்திய அணி இந்தாண்டு பெற்ற 8 முக்கியமான மற்றும் மோசமான அடிகளை இங்கு பார்ப்போம்.

தொடக்கமே தோல்வி தான்

தொடக்கமே தோல்வி தான்

2022ம் ஆண்டின் முதல் தொடரே இந்தியா தோல்வியுடன் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என மோசமாக தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு தான் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகினார். இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெற்ற போதும், அடுத்த 2 போட்டிகளில் தொடர் தோல்விகள் கிடைத்தன. இதனால் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு சுக்குநூறாக உடைந்தது.

 வரலாற்று டெஸ்ட் தொடர்

வரலாற்று டெஸ்ட் தொடர்

2021ம் ஆண்டு இங்கிலாந்துடனான 5 டெஸ்ட் போட்டிகளில் 4 மட்டுமே நடந்திருந்தன. பல்வேறு விவாதங்களுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்ட கடைசி போட்டி மட்டும் 2022ம் ஆண்டு நடந்தது. இதில் 2 - 1 என முன்னிலையில் இருந்த இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றிருக்கலாம். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் தோற்றது. 378 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்த போதும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் தோற்று தொடரை சமன் செய்தது.

50 ஓவர் கிரிக்கெட் தொடர்

50 ஓவர் கிரிக்கெட் தொடர்

ஒருநாள் கிரிக்கெட்டும் இந்தாண்டு இந்தியாவுக்கு சரிவர அமையவில்லை. தென்னாப்பிரிக்காவுடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கியது. கொஞ்சமாவது சமாளிக்கும் என்று நினைத்த நிலையில் 3 - 0 என்ற கணக்கில் முற்றிலுமாக ஒயிட் வாஷ் ஆனது.

நியூசிலாந்துடனான தொடர்

நியூசிலாந்துடனான தொடர்

நியூசிலாந்துடனான சமீபத்தில் சுற்றுப்பயணமும் மோசமாக தான் அமைந்தது. டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றிய சூழலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தவான் தலைமையில் களமிறங்கியது. ஆனால் பெரும் ஏமாற்றமாக 1 - 0 என தோற்றது. குறிப்பாக இந்தியா நிர்ணயித்த 307 ரன்களையும் நியூசிலாந்து அசால்ட்டாக எட்டி அசத்தியது.

 இங்கிலாந்துடனான தோல்வி

இங்கிலாந்துடனான தோல்வி

இந்தாண்டு இந்திய அணிக்கு மறக்கவே முடியாத தோல்விகளின் பட்டியல் என்றால் அதில் டி20 உலகக்கோப்பை முதலிடத்தில் இருக்கும். லீக் சுற்றுகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்த இந்தியா கோப்பையையே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றியது.

கத்துக்குட்டியிடம் அடி

கத்துக்குட்டியிடம் அடி

கத்துக்குட்டி அணியான வங்கதேசத்திடமும் அடிவாங்க தவறவில்லை. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, தனது முழு பலத்துடன் களமிறங்கியது. ஆனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் 2023ம் ஆண்டாவது இந்திய கிரிக்கெட்டிற்கு பொற்காலமாக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Thursday, December 15, 2022, 17:29 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+