For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி.. அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

டெல்லி : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்காக தேர்வுக் குழு இன்று கூட உள்ளது.

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், அடுத்து அக்டோபர் 4 முதல் தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் முடிய செப்டம்பர் 28 ஆகும். அதில் இருந்து குறைந்த இடைவெளியே இருப்பதால், இப்போதே தேர்வுக் குழு கூடி விவாதிக்க உள்ளது, எனினும், இதன் முடிவுகள் ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அணித்தேர்வில் முக்கிய பிரச்சனைகள்

அணித்தேர்வில் முக்கிய பிரச்சனைகள்

இந்திய அணியை தேர்வில் அஸ்வின், இஷாந்த் சர்மாவின் காயம், ஷிகர் தவானின் டெஸ்ட் போட்டிகளின் பார்ம், வரிசை கட்டி நிற்கும் இளம் வீரர்களில் யாரை தேர்வு செய்வது போன்றவை முக்கிய விஷயமாக விவாதம் செய்யப்படும்.

டெக்னிக் மாற்றாத தவான்

டெக்னிக் மாற்றாத தவான்

தவான் சமமான ஆடுகளங்களில் பட்டையைக் கிளப்புகிறார். அது போன்ற ஆடுகளங்களில் அவரது ரன் குவிப்பை நிறுத்த பந்துவீச்சாளர்கள் திணறுகிறார்கள். மாறாக, பந்து ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் தவான் திணறுகிறார். அந்த இடங்களில் அவர் எந்த புது முயற்சியும் செய்யாமல் தன் ஒரே பாணி ஆட்டத்தால் விக்கெட்டை விரைவாக இழந்து விடுகிறார். இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர் நிச்சயம் ரன் குவிப்பார். ஆனால், அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சொதப்புவார். எனவே, அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் உண்டா? இல்லையா? என்பது முக்கிய விஷயமாக இன்று இருக்கும்.

அஸ்வின், இஷாந்த் காயம்

அஸ்வின், இஷாந்த் காயம்

காயமடைந்து உள்ள அஸ்வின், இஷாந்த் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குள் தகுதி பெற்று விடுவார்களா? அவர்களுக்கு மாற்றாக யாரை அணியில் சேர்ப்பது என்பது அடுத்த பிரச்சனையாக இருக்கும். ஜடேஜா, குல்தீப் யாதவ் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார்கள்.

மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு?

மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு?

ப்ரித்வி ஷா, மாயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, கருண் நாயர், ஷாபாஸ் நதீம் என பெரும் கூட்டமே வாய்ப்புக்காக காத்திருக்கிறது. இவர்களுக்கு உத்தேச அணியில் இடம் கிடைத்தாலும் களத்தில் இறங்கி ஆட விடுவார்களா? அல்லது அறையில் அமர்ந்து போட்டியை வேடிக்கை மட்டும் பார்க்க வைப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. கருண் நாயர் இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றாலும், 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

Story first published: Wednesday, September 26, 2018, 17:58 [IST]
Other articles published on Sep 26, 2018
English summary
Indian cricket team selectors going to meet today for selecting West Indies test series squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X