இங்கிலாந்தில் இந்தியா.... நாளை துவங்குகிறது போட்டிகள்... எங்கு எப்போது விளையாடுகிறார்கள் தெரியுமா!
Recommended Video

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி-20 போட்டி நாளை இரவு துவங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் நடக்கிறது. இரண்டாவது டி-20 6ம் தேதி இரவு 10 மணிக்கு கார்டிப்பில் நடக்கிறது. மூன்றாவது டி-20 8ம் தேதி இரவு 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து மூன்று ஒருதினப் போட்டிகள் நடக்க உள்ளன. நாட்டிங்காமில் 12ம் தேதி மாலை 5 மணிக்கு முதல் போட்டி நடக்கிறது. இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. மூன்றாவது போட்டி லீட்ஸில் 17ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.

5 டெஸ்ட் போட்டிகள்
முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 1 - 5 பிர்மிங்ஹாமிலும், இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 9 -13 வரையிலும், மூன்றாவது டெஸ்ட் நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 18-22 வரையிலும், நான்காவது டெஸ்ட் சவுத்ஹாம்டனில் ஆகஸ்ட் 30-செப்டம்பர் 3 வரையிலும், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-11 வரையிலும் நடக்க உள்ளது. டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்குகின்றன.

உலகக் கோப்பைக்காக
2019ல் உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் இந்தச் சுற்றுப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குருனாலுக்கு வாய்ப்பு
டி-20 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் விலகினர். அவர்களுக்கு பதிலாக குருனால் பாண்டயா மற்றும் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி-20க்கான இந்திய அணி:
விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகார் தவான், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குருனால் பாண்டயா, புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், ஹார்திக் பாண்டயா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். ஆகியோர் டி-20க்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications