Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணிக்கு Water Cannon salute.. அப்படி என்றால் என்ன?

மும்பை : டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாட்டர் கேனன் சல்யூட் என்ற மரியாதை வழங்கப்பட்டு இருக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி t20 உலக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணி தற்போது மும்பை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கி இருக்கிறார்கள். இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது விஸ்தாரா விமான மூலம் மும்பை வந்துள்ளனர்.

Indian Cricket Team mumbai

மும்பை வந்த வீரர்களுக்கு வாட்டர் சல்யூட் வழங்கப்பட்டிருக்கிறது. வாட்டர் சல்யூட் என்றால் விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது அங்கு வரிசையாக அணி வகுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் இருந்து விமானத்தின் இரு பக்கத்திலிருந்தும் தண்ணீர் பீச்சு அடிக்கப்படும். இப்படி ஒரு மரியாதை தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஒரு விமானி ஓய்வு பெறும் போது அவருடைய சேவையை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக இந்த நடைமுறை வழங்கப்படும். மேலும் ஏதேனும் நாட்டுத் தலைவர்கள் விமானம் மூலம் தரையிறங்கும் போது இந்த மாதிரி மரியாதை வழங்கப்படும். இப்படிப்பட்ட ஒரு மரியாதை தான் தற்போது இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

டி20 உலக கோப்பையை வென்றதற்காகவும் விராட் கோலி ரோஹித் சர்மா ஜடேஜா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதன் காரணமாகவும் அவர்களுக்கு இந்த மரியாதையை பிசிசிஐ வழங்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

அப்போது அதிகாரிகள் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கி கௌரவித்தனர். ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே வீரர்கள் பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வீரர்களுடன் எப்படியாவது செல்பி எடுத்து விட வேண்டும் என ரசிகர்கள் போட்டி போட்டு நின்று கொண்டிருந்தனர். இதை அடுத்து தற்போது வீரர்கள் சொகுசு பேருந்தில் அழைத்து வரப்பட்டு மரையன் டிரைவுக்கு செல்ல உள்ளனர்.

Story first published: Thursday, July 4, 2024, 18:42 [IST]
Other articles published on Jul 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+