நம்பவே முடியவில்லை.. உடைந்து போன அஸ்வின், டிகே.. விவேக் மறைவிற்கு உருக்கமான டிவிட்.. இரங்கல்!
சென்னை: நடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், அபினவ் முகுந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
தமிழக சினிமா உலகில் கோலோச்சி வந்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நிமிடத்திற்கு நிமிடம் இவரின் உடல்நிலை மோசமானது.

ஆஞ்சியோ
இவருக்கு நேற்று ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இவருக்கு இடதுபுற ரத்தக்குழாயில் 100% ஏற்பட்டதால் கொடுக்கப்பட்ட சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த விவேக் இன்று அதிகாலை காலமானார்.

இரங்கல்
விவேக்கின் மறைவு தமிழகத்தை உலுக்கி உள்ளது. இவருக்கு வெறும் 59 வயதுதான். ஆகிறது நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஸ்வின்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்துள்ள இரங்கல் டிவிட்டில், விவேக் மறைந்துவிட்டார் என்பதை முடியவில்லை. அவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
அபினவ் முகுந்த்
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் இதேபோல் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உங்களின் காமெடிகள் உங்களின் மறைவிற்கு பின்பும் எங்களுடன் எப்போதும் இருக்கும் என்று முகுந்த் டிவிட் செய்துள்ளார்.
தினேஷ்
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ள இரங்கலில் மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும்.. தனது காமெடி சமூக கருத்துக்களை சொன்னவர் விவேக் என்று தினேஷ் கார்த்திக் பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications