Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டியில் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்த இந்திய வீரர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

கொல்கத்தா : டி20 போட்டிகளில் சிறந்து விளங்கிய 28 வயதான இந்திய வீரர் ஒருவர் வீட்டில் மாடி படியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக உயர்ந்து இருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது விபத்து ஆகும். ஏற்கனவே 19 வீரர் முசீர்கான் கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 26 வயதான அசிப் உசேன் வீட்டில் நடந்த விபத்தில் சிக்கி காலமாகி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு டி20 தொடர் நடைபெறுகிறது. இதன் மூலம் உள்ளூர் வீரர்களின் திறமை அறியப்பட்டு அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவுகிறது.

ind vs ban asif hussain bengal pro t20

இந்த சூழலில் டிஎன்பிஎல் தொடர் பாணியில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பெங்கால் ப்ரோ டி20 தொடரில் ஆடம்ஸ் ஹவ்ரா வாரியர் அணிக்காக விளையாடிய ஆசிப் உசேன் என்ற வீரர் தான் காலமாகி இருக்கிறார். இவர் பெங்கால் டி20 தொடரில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி அசத்தியிருக்கிறார். ஒரு இன்னிங்ஸில் 57 பந்துகளை எதிர் கொண்டு 99 ரன்கள் குவித்தார்.

இதனால் ஆசிப் உசேன், ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் ஆசிப் உசேன் வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மாடிப்படியில் கால் தவறி கீழே விழுந்திருக்கிறார். இதில் ஆசிப் உசேனுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து, அவர் கொல்கத்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் காலமாகி விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆசிப் உசேன் உயிரிழப்பு பெங்கால் கிரிக்கெட்டை உலுக்கி இருக்கிறது. ஆசிஃப்க்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆசிப் உசைன் மிசோரம் மற்றும் அருணாச்சல் பிரதேச அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார்.ஆசிப் உசேனின் மரணம் அம்மாநில கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

Story first published: Tuesday, October 1, 2024, 13:02 [IST]
Other articles published on Oct 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+