For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன் சிங் ஓய்வு.. ட்விட்டரில் வெளியிட்ட உருக்கமான பதிவு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

மும்பை: இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்பஜன் சிங், உருக்கமான பதிவுடன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

அடுத்து பயிற்சியாளர் பொறுப்பு? விரைவிலேயே Retirement-ஐ அறிவிக்க போகும் Harbhajan Singh?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக கொடிகட்டி பறந்தவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் பெரும் தாக்கத்தை கொண்டு வந்தவர்.

உலகின் மிகப்பெரிய அதிரடி ஆட்டக்காரர்கள் எல்லாம் ஹர்பஜனின் பந்துவீச்சிற்கு முன்னர் மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறியதுண்டு. அப்படிபட்ட வீரர் இன்று ஓய்வை அறிவிக்கவுள்ளார்.

ஹர்பஜன் புள்ளிவிவரம்

ஹர்பஜன் புள்ளிவிவரம்

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 1998ம் ஆண்டு அறிமுகமான ஹர்பஜன் சிங், இதுவரை 417 டெஸ்ட் விக்கெட்கள், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்கள் மற்றும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். எனினும் இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாட ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி வீரராக இருந்தபோதும், தற்போது அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த ஐபிஎல் சீசனில் முதல் பகுதியில் விளையாடிய ஹர்பஜன், 2வது பகுதியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். அவரின் ஃபார்ம் போய்விட்டதாக கூறி இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

 ஹர்பஜனின் முடிவு

ஹர்பஜனின் முடிவு

இந்நிலையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவு என்பது வரும். அந்தவகையில் எனக்கும் கிரிக்கெட் போட்டிகள் எனது வாழ்வில் மறக்கமுடியாதது. கடந்த 23 ஆண்டு பயணத்தை மிகவும் அழகாகவும், மறக்கமுடியாத நினைவுகளை கொடுத்த அனைவருக்கும் நன்றி எனக்கூறியுள்ளார்.

அடுத்தகட்ட முடிவு

அடுத்தகட்ட முடிவு

இதன் மூலம் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் பங்கேற்க போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 41 வயதாகும் ஹர்பஜன் அடுத்ததாக பயிற்சியாளர் அவதாரம் எடுக்கவிருப்பதாக தெரிகிறது. கொல்கத்தா அணியின் பவுலிங் ஆலோசகராக அவர் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மெகா ஏலத்தின் போது வீரர்களை தேர்வு செய்ய அவரின் பணியை தான் பயன்படுத்தவிருக்கின்றனர்.

Story first published: Friday, December 24, 2021, 20:34 [IST]
Other articles published on Dec 24, 2021
English summary
Spinner Harbhajan Singh announced his retirement from all format of Cricket,ready for doing coach role in IPL 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+