For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜன் வீட்டுக்கு சென்ற நற்செய்தி..2வது குழந்தை பிறந்தது..ஆணா? பெண்ணா?.. ரசிகர்கள் கேள்விக்கு பதில்

பஞ்சாப்: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் வீட்டில் நடந்துள்ள நல்ல விஷயத்திற்காக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் திகழ்ந்து வருகிறார்.

சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஐபிஎல் தொடரில் அவர் மட்டும் விளையாடி வருகிறார்.

ஹர்பஜன்

ஹர்பஜன்

ஐபிஎல் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங், நடப்பாண்டு தொடரில் கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல்லும் ஹர்பஜனுக்கு சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சினிமா மற்றும் மாடலிங் துறையின் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் ஹர்பஜனின் வீட்டிற்கு புதிய வரவு ஒன்று வந்துள்ளது. இவருக்கும் இவரது மனைவி கீதா பாஸ்ரா காதல் தம்பதிக்கு ஏற்கனவே அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஹர்பஜன் சிங் - கீதா பாஸ்ரா தம்பதிக்கு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஜலந்தரில் பிரம்மாண்டமான திருமண விழா நடைபெற்றது.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், நாங்கள் தாங்கி பிடிக்க மகன் பிறந்துள்ளான். எங்களுக்கு கிடைத்த பெரிய வரம் இது. தற்போது கீதா மற்றும் குழந்தை இருவருமே நலமுடன் இருக்கின்றனர். உங்கள் அனைவரின் அன்பிற்கு, ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றிகள் எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

குழந்தை பிறந்த மகிழ்ச்சி மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்த மகிழ்ச்சி செய்தியும் காத்துள்ளது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா,வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே வெளியான சூழலில் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, July 10, 2021, 19:08 [IST]
Other articles published on Jul 10, 2021
English summary
Indian Cricketer Harbhajan Singh announced good news for fans, He and Geeta Basra Blessed With A Baby Boy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+