கோப்பை வென்ற கையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல் திருமணம்.. தென்னிந்திய நடிகையை மணக்கிறார்!
Recommended Video
மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே, உதயம் என்.எச்.4 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தென்னிந்திய நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மும்பையில் இன்று திருமணம் செய்கிறார்.
நேற்று சூரத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கர்நாடக அணி கேப்டன் மணிஷ் பாண்டே, வெற்றிக் கோப்பையுடன் மும்பையில் நடைபெறும் தன்னுடைய திருமணத்திற்கு சென்றார்.
இந்த திருமணத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட நெருக்கமான சிலரே பங்கேற்கவுள்ளனர். இந்திய அணியில் பங்கேற்கவுள்ள பாண்டே, அந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு முன்பாக தன்னுடைய திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கர்நாடக அணி வீரர்
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கும் மணிஷ் பாண்டே கர்நாடக அணியின் கேப்டனாக உள்ளார். மேலும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்காக துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

32 சர்வதேச டி20 போட்டிகள்
இந்திய அணிக்காக 23 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 32 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள மணிஷ் பாண்டேவின் சராசரி வேகம் 50 ஓவர் போட்டிகளில் 36.7ஆகவும் 20 ஓவர்கள் போட்டிகளில் 39.1ஆகவும் உள்ளது.

வெற்றியை கைகொண்ட மணிஷ்
சூரத்தில் நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியில் மணிஷ் பாண்டே தலைமையில் தமிழகத்தை எதிர்த்து போட்டியிட்ட கர்நாடக அணி கோப்பையை வென்றுள்ளது.

மும்பையில் இன்று திருமணம்
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கையோடு மும்பையில் இன்று நடைபெறும் தன்னுடைய திருமணத்திற்கு சாலை வழி பயணமாக சென்ற மணிஷ், மும்பையில் பிரபல ஹோட்டலில் நடைபெறும் தன்னுடைய திருமணத்தில் பங்கேற்கிறார்.

உதயம் என்.எச்.4 நாயகியுடன் திருமணம்
உதயம் என்.எச்.4 மற்றும் ஒரு கன்னியும் 3 களவாணிகளும் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள அஷ்ரிதா ஷெட்டியை மணிஷ் பாண்டே மணக்கிறார். இதில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பு
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற கையுடன் தன்னுடைய திருமணம் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்த மணிஷ், இந்திய அணியின் தொடருக்காக காத்திருப்பதாகவும் அதற்கு முன்பாக தன்னுடைய திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications