Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு நிச்சயம்.. சமாஜ்வாதி கட்சி எம்பி உடன் திருமணம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமைவாய்ந்த இளம் வீரர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் என்றால், அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங்.

இவர், ஜூன் 8 ஆம் தேதி பிரபல அரசியல்வாதி பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரிங்கு சிங், கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி வீரராக தன்னை நிலைநிறுத்தி, இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றிகரமான இன்னிங்ஸ்களை விளையாடிள்ளார்.

Rinku singh

மறுபுறம், பிரியா சரோஜ் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டு 2024 ஜூன் முதல் மக்களவை உறுப்பினராக பதவி வகிக்கிறார்.பிரியாவின் தந்தையும் அனுபவமிக்க அரசியல்வாதியுமான துஃபானி சரோஜ், இருவரும் குடும்பத்தினரின் ஒப்புதல் உடன் திருமணம் செய்ய உள்ளதாக "இரு குழந்தைகளும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, எங்களின் அனுமதியைக் கோரியுள்ளனர்.

நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. இது தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன," என்று துஃபானி சரோஜ் தெரிவித்தார்.
ரிங்கு சிங் இதுவரை 59 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 30.52 சராசரியுடன் 1,099 ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 145.17 ஆகும்.

நடப்பு ஐபிஎல் சீசனில், 13 போட்டிகளில் 206 ரன்கள் குவித்து, 29.42 சராசரி மற்றும் 153.73 ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்துள்ளார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்திய அணிக்காக 33 டி20 போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டி20 வடிவத்தில் 42.00 சராசரியுடன் 546 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 27.50 சராசரியுடன் 55 ரன்களும் எடுத்துள்ளார்.

Story first published: Sunday, June 1, 2025, 18:28 [IST]
Other articles published on Jun 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+