Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் நடத்திய இன்ஸ்டா லைவ்.. தோனி கொடுத்த சர்பரைஸ்.. வீடியோ இணைப்பு உள்ளே

டிரிண்டாட்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Recommended Video

Rishabh Pant-ன் Insta Live-ல் Dhoni கொடுத்த Surprise Visit | *Cricket

இதனை தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி இன்று மேற்கின் தீவுகளுக்கு விமான மூலம் வந்து இறங்கியது.

இன்ஸ்டா லைவ்

தினேஷ் கார்த்திக்,ரோகித் சர்மா ,ரிஷப் பண்ட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த பயணத்தில் இருந்தனர். இந்த நிலையில் வீரர்கள் தங்களது ஹோட்டலுக்கு சென்று இரண்டு நாள் குவாரன்டைனில் உள்ளனர். அப்போது நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனியாக இருக்கும் பொழுதை கழிக்கும் வகையில் இன்ஸ்டாவில் லைவ் நடத்தினார்.

ஷாக்சி தோனி

ஷாக்சி தோனி

இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர் .இப்போது ரிஷப் பன்ட் தோனிக்கு வீடியோ கால் செய்து இந்த நேரலையில் பங்கேற்க வைத்தார். அப்போது தோனியின் மனைவி சாக்‌ஷி ரிஷப் பண்டிற்கு ஹாய் சொன்னார்.

நேரலையில் கிண்டல்

நேரலையில் கிண்டல்

அதன் பின்னர் தோனியை பார்த்து நன்றாக பொழுதை கழிக்கிறீர்கள் என்று ரிசப் பண்ட் ஹிந்தியில் கூற சிரிப்பை அடக்க முடியாத தோனி உடனே கேமராவில் கையை வைத்து மறைத்துக் கொண்டார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்குள் நடத்திய இந்த நேரலை பல ரசிகர்களும் கண்டுகளித்தனர்.

டி20 தொடர்

டி20 தொடர்

ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில் கடைசி போட்டி நாளை இந்திய நேரப்படி ஏழு மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் டி20 போட்டி வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி, பும்ரா ஆகியோர் இல்லை. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளன.

Story first published: Tuesday, July 26, 2022, 23:16 [IST]
Other articles published on Jul 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+