Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை சுளுக்கு எடுக்க அவர் வராரு..!! தென்னாப்பிரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த இளம் வீரர்..

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல சம்பவங்கள் நிகழ போவது உறுதி

ஆம், கிரிக்கெட்டை தவிர சில அதிரடி ஆக்சன் காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

இதனை தான் தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய அணியின் இளங்கன்று ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருகிறார் ஹீரோ

வருகிறார் ஹீரோ

சினிமாவில் நாம் பார்த்து இருப்போம், ஹீரோ எங்கேயாவது சென்று இருந்தால், அவர்கள் நண்பர்கள், குடும்பங்களை வில்லன்கள் அடித்து மிரட்டுவார்கள். அதே போல் தான் இந்திய அணியின் ஹீரோ விராட் கோலி இல்லாத நேரத்தில் பல அக்கப் போர்களை தென்னாப்பிரிக்க அணி மேற்கொண்டனர்.

சீண்டல்

சீண்டல்

ஜோகனஸ்பர்க் டெஸ்டில் இந்திய அணி தங்களது 2வது இன்னிங்சில் பேட் செய்யும் போது தென்னாப்பிரிக்க வீரர்கள் ஸ்லேஜ் செய்தனர். இந்திய வீரர்களின் கவனத்தை குலைக்கும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் நடந்து கொண்டனர். குறிப்பாக ரிஷப் பண்ட்க்கு ஷாட் பாலாக வீசியும் கேலியும் செய்ய, அவர் டக் அவுட்டாகி வெளியேறினார்

பும்ராவுடன் மோதல்

பும்ராவுடன் மோதல்

இதே போன்று பும்ராவையும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் விட்டுவைக்கவில்லை. அவர் பேட்டிங் செய்த போது, அவருக்கு காயம் ஏற்படுத்தும் விதமாக பந்துவீசி சண்டைக்கு அழைத்து வம்பிழுத்தனர்.இதனால் மார்கோ ஜென்சனுக்கும், பும்ராவுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

கேப்டன் கே.எல்.ராகுலையும் இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் வம்பிழுத்தனர். இந்திய வீரர்கள் பந்துவீசும் போது திடீரென்று கிரிசை விட்டு விலகி வெறுப்பேற்றினர். தென்னாப்பிரிக்க வீரர்களை மீண்டும் ரிஷப் பண்ட் ஸ்லேஜ் செய்தாலும், அதனை பேட்டிங்கிலும், அவ்வப்போதே திருப்பி தரவும் ஆள் இல்லை.

கோலி ரிட்டன்ஸ்

கோலி ரிட்டன்ஸ்

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரும், 2018 U-19 உலகக் கோப்பையை வென்றவருமான ரியான் பராக். சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா செய்ததை எல்லாம் அவர் பார்த்து கொண்டு தான் இருந்தார். எச்சரிக்கையாக இருங்கள் என்று தென்னாப்பிரிக்க வீரர்களுக்காக பதிவிட்டு உள்ளார். விராட் கோலி திருப்பி தருவாரா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

Story first published: Sunday, January 9, 2022, 16:45 [IST]
Other articles published on Jan 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+