Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியாக 13 ஆண்டுகள் கழித்து ஆர்.பி.சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்

மும்பை : இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச போட்டிகளில் ஆடிய ஆர்.பி. சிங், தன் ஓய்வை அறிவித்துள்ளார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் 2005ஆம் ஆண்டு தன் முதல் சர்வதேச போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார்.

சில ஆண்டுகள் இந்திய அணியில் ஆடியவருக்கு, காயம் மற்றும் பார்ம் அவுட் காரணங்களால் அணியில் இடம் கிடைக்காமல் போனது. பின் ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகள் ஆடினார்.

தற்போது கிரிக்கெட் போட்டிகளின் போது தொலைக்காட்சி வர்ணனைகள் செய்து வருகிறார். கடந்த ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். இந்த நிலையில் தான் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவருக்கு வயது 32 தான் ஆகிறது.

உ.பி. கிராமத்தில் இருந்து வந்தார்

உ.பி. கிராமத்தில் இருந்து வந்தார்

ஆர்.பி.சிங் என அறியப்படும் ருத்ர பிரதாப் சிங், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். அங்கிருந்த ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்தார். கடுமையான போராட்டத்திற்குப் பின் தான் அவரால் இந்த இடத்தை அடைய முடிந்தது. 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆர்.பி.சிங்

சர்வதேச கிரிக்கெட்டில் ஆர்.பி.சிங்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இதுவரை 14 டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகள் ஆடியுள்ளார். டெஸ்டில் 40 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில், 69 விக்கெட்களும், டி20 போட்டிகளில் 15 விக்கெட்களும் எடுத்துள்ளார். இவரது ஒரே பிரச்சனை அதிக ரன் விட்டுக் கொடுக்கிறார் என்பதாக இருந்தது. ஒரு ஓவருக்கு விட்டுக் கொடுக்கும் ரன் விகிதம் டெஸ்டில் 3.98, ஒருநாள் போட்டிகளில் 5.48, டி20யில் 6.81 என இருந்தது. இதுவே இவருக்கு பின்னடைவாக அமைந்தது.

சரியாக 13 ஆண்டுகள் கழித்து ஓய்வு

சரியாக 13 ஆண்டுகள் கழித்து ஓய்வு

ஆர்.பி.சிங் சரியாக செப்டம்பர் 4, 2005 அன்று தன் முதல் சர்வதேச போட்டியில் ஆடினார். தற்போது சரியாக 13 ஆண்டுகள் கழித்து தன் ஓய்வை அறிவித்து உள்ளார். "13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் சட்டையை அணிந்தேன். என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான்" என கூறியுள்ளார்

மறக்க முடியாத போட்டி

மறக்க முடியாத போட்டி

ராகுல் டிராவிட் தலைமையில் லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் எடுத்தார் ஆர்.பி.சிங். அந்த போட்டியில் இந்தியா வென்றது. அதுவே இவரின் மறக்க முடியாத போட்டி என குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் இந்தியா அந்த டெஸ்ட் தொடரை வென்றது.

Story first published: Wednesday, September 5, 2018, 15:35 [IST]
Other articles published on Sep 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+