Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசு வித்தியாசத்தை பார்த்தீங்களா.. ஆயிஷா முகர்ஜிக்கு 2 குழந்தை வேறு.. ஷிகர் தவான் காதல் என்னாச்சு?

மும்பை: இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் தன்னை விட 10 வயதை மூத்த பெண்ணை ஏன் திருமணம் செய்து கொண்டார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது பார்க்கலாம்.

அண்மை காலங்களில் இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் பேசிவரும் கருத்துகள் ரசிகர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. தத்துவவார்த்த ரீதியாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வரும் தவான், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதை கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டதாக சுப்மன் கில்லு ஆதரவளித்தது ஆச்சரியமளித்தது. ஏனென்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பலரும் அணி நிர்வாகத்தையும் கேப்டனையும் தான் விமர்சிப்பார்கள்.

Indian Cricketer Shikhar Dhawan Love and Separation with Ex-Wife Ayesha Mukherjee - A Short Glimpse

ஆனால் ஷிகர் தவான் தன் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். அப்படியிருக்கும் ஷிகர் தவானின் சொந்த வாழ்க்கை பல்வேறு திருப்பங்களையும், ட்விஸ்ட்களையும் கொண்டது. 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷிகர் தவான். ஆயிஷா முகர்ஜியின் தந்தை பெங்காலி, தாய் பிரிட்டிஷை சேர்ந்தவர். இதனால் பிறக்கும் போதே பல்வேறு கலாச்சாரங்களும் ஆயிஷா முகர்ஜி வீட்டில் இருந்தன.

அதனால் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஆயிஷா முகர்ஜிக்கு குத்துச்சண்டை மீதான ஆர்வம் அதிகமாகியது. இதனால் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்ட அவர், பிரபல குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வந்தவர். தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச பாக்ஸராக அசத்தி இருக்கிறார். இதன்பின் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்த ஆயிஷா முகர்ஜி, அவருடன் வாழ்ந்த போது இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 2000ஆம் ஆண்டு ஒரு குழந்தையும், 2005ஆம் ஆண்டு ஒரு குழந்தையும் பிறந்தது.

இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயிஷா முகர்ஜி விவாகரத்து செய்தார். இதன்பின் ஹர்பஜன் சிங் மூலமாக ஷிகர் தவானுடன் பழக்கம் ஏற்பட, இருவரும் சில காலங்கள் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 10 வயது வித்தியாசம், இரு குழந்தைகளுக்கு தாய் என்ற போதிலும் ஷிகர் தவான் திருமணம் செய்தார்.

Indian Cricketer Shikhar Dhawan Love and Separation with Ex-Wife Ayesha Mukherjee - A Short Glimpse

ஏற்கனவே குத்துச்சண்டை வீராங்கனை என்பதோடு, நட்சத்திர கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ததால், ஆயிஷா முகர்ஜியின் புகழ் உச்சிக்கு சென்றது. என்னதான் குத்துச்சண்டையில் இருந்து விலகினாலும் ஆயிஷா முகர்ஜியின் ஃபிட்னஸ் கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் 2014ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நட்சத்திர ஜோடியாக இருவரும் வலம் வந்த நிலையில், திடீரென ஆயிஷா முகர்ஜி ஷிகர் தவானை பிரித்து சென்றார். அதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானின் மகனையும் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றுவிட்டார். இதன்பின் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரிலேயே ஷிகர் தவானால் தனது மகனை பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 14, 2023, 20:07 [IST]
Other articles published on Aug 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+