Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாரா டெண்டுல்கருடன் பிரேக்கப்.. இளம் நடிகையுடன் காதலில் விழுந்த சுப்மன் கில்.. என்ன நடந்தது?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் மற்றும் நடிகை அவ்னீத் கவுர் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகை அவ்னீத் கவுருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில். 25 வயதாகும் சுப்மன் கில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பிளேயிங் லெவனில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள சுப்மன் கில், விரைவில் கேப்டனாக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் சுப்மன் கில்லின் பிராண்ட் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ind vs ban shubman gill sara tendulkar

ஏற்கனவே ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். இவரும் சச்சின் டெண்டுல்கரின் மகளுமான சாரா டெண்டுல்கர் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தன. இதனை நிரூபிக்கும் வகையில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இருவரும் ஒரே இடங்களில் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதேபோல் ஜியோ கண்காட்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதும் ட்ரெண்டாகியது.

இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சாராவை டேட் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்று சுப்மன் கில் பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் விளையாடும் போட்டிகளை பார்க்க சாரா டெண்டுல்கர் நேரில் வந்ததும் சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்தது. இதனால் விரைவில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் திருமணம் நடக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இணை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகின. ஏனென்றால் சுப்மன் கில்லின் 25வது பிறந்தநாள் செப்டம்பர் 8ஆம் தேதி மாலை கொண்டாடப்பட்டது. அதேபோல் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் சுப்மன் கில்லுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து கூறினர்.

அதில் நடிகை அவ்னீத் கவுரின் பிறந்தநாள் வாழ்த்து ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், "ஹேப்பி பர்த்டே சுப்மன்.. தொடர்ந்து மக்களை ஊக்கமளிக்கவும் வகையில் செயல்படு.. எப்போதும் எங்களின் பெருமைக்குரியவன் நீ" என்று பதிவிட்டுள்ளதோடு, பெயருக்கு பின் ஒரு ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியது.

இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் கடந்த டிசம்பரில் லண்டனில் ஒன்றாக சந்தித்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. சுப்மன் கில் மற்றும் அவரது நண்பர்களுடன் அவ்னீத் கவுரும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால் சுப்மன் கில் - அவ்னீத் கவுர் இருவரும் காதலித்து வருவதாக சில விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் இதுவரை இரு தரப்பிலும் எந்த மறுப்பும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 11, 2024, 14:51 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+