For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி சிக்கலும் தீர்ந்தது.. இந்திய அணிக்கு விரைவில் திரும்பும் கேரளா எக்ஸ்பிரஸ்.. விவிரம் இதோ..!!

சென்னை: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் 125 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பந்தை வீசுவார்கள் என்று ஒரு காலம் இருந்தது.

தற்போது இந்த நிலை இல்லை என்றாலும், முதல் முறையாக இதனை மாற்றியவர் கேரளா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஸ்ரீசாந்த் தான்.

பந்துவீச்சில் மட்டும் அல்ல களத்திலும் அனலாக தெறிக்க கூடியவர். விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு அவர் செய்யும் சேட்டைக்கே ரசிகர்கள் அதிகம்

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட்களில் விளையாடி 87 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் அவர் பிடித்த கேட்ச்சால் தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார் ஸ்ரீசாந்த்.

வாழ்நாள் தடை

வாழ்நாள் தடை

ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கைய இழந்தார் ஸ்ரீசாந்த். அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுத்தார். அப்போது ஸ்ரீசாந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவரது வாழ்நாள் தடையை நீக்க உத்தரவிட்டது.

ரஞ்சி அணியில் இடம்

ரஞ்சி அணியில் இடம்

இதனையடுத்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஸ்ரீசாந்தின் தடைக்காலம் நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஸ்ரீசாந்த் கேரள அணிக்காக ஒரு போட்டியில் சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடினார். தொடர்ந்து தமது பந்தவீச்சில் கவனம் செலுத்தி வந்த 38 வயதான ஸ்ரீசாந்த், கேரள ரஞ்சி அணியின் உத்தேச பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

மீண்டும் திரும்புகிறார்

மீண்டும் திரும்புகிறார்

இந்த செய்தியை ஜெர்சி படத்தின் காட்சி மூலம் பதிவிட்ட ஸ்ரீசாந்த், சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாக உணர்கிறேன். 9 ஆண்டுகளக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது, எனக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார். ஸ்ரீசாந்த் ரஞ்சி அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டால், அவர் இந்திய அணிக்கும் திரும்ப வாய்ப்பு உள்ளது. ஐ.பி.எல். தொடரிலும் ஸ்ரீசாந்தை நாம் இனி காணலாம்.

Story first published: Saturday, December 25, 2021, 22:23 [IST]
Other articles published on Dec 25, 2021
English summary
Indian cricketer sreesanth named in Kerala ranji team கடைசி சிக்கலும் தீர்ந்தது.. இந்திய அணிக்கு விரைவில் திரும்பும் கேரளா எக்ஸ்பிரஸ் ஸ்ரீசாந்த்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+