Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதலுக்காக மதம் மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்.. அதுவும் முதல் மனைவி கூட இல்ல.. சர்ச்சையான வாழ்க்கை

மும்பை : திறமை இருந்தும் பாதை மாறினால் அனைத்தும் வீணாகிவிடும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி.

கிரிக்கெட்டில் சச்சின் ராமர் என்றால் வினோத் காம்ப்ளி லக்ஷ்மன் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இருவரும் சகோதரர்கள் போல் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒன்றாகவே ஆரம்பித்தார்கள்.

Indian cricketer Vinod Kambli who converted to Christianity for his 2nd wife

மும்பையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சச்சினும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது அப்போதைய சாதனையாக இருந்தது. வினோத் காம்ப்ளி 1991 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிராக சதம் , ஒரே ஆண்டில் பத்து அரை சதம் ,1993 ஆம் ஆண்டு விளையாடிய இரண்டாவது டெஸ்டிலேயே இரட்டை சதம், மூன்றாவது டெஸ்டிலும் இரட்டை சதம், நான்காவது டெஸ்டில் சதம் என தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பிரம்மாண்டமாக வினோத் காம்ப்ளி தொடங்கினார்.

அதன் பிறகு தமக்கு கிடைத்த பிரபலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் வினோத் காம்ப்ளி பாதை மாறினார். சக கிரிக்கெட் வீரர்களுடன் கோபம், மது, மாது, போதை என தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை வினோத் காம்பிளி சீரழித்துக் கொண்டார். இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு ஹோட்டலில் வரவேற்பு அறையில் பணிபுரிந்த பெண்ணை வினோத் காம்ப்ளி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளிலே அவரை வினோத் காம்ப்ளி விவாகரத்து செய்தார்.

Indian cricketer Vinod Kambli who converted to Christianity for his 2nd wife

அதன் பிறகு வினோத் காம்ப்ளி ஆண்ட்ரியா என்ற மாடல் அழகியை காதலித்தார். அவர் கிறிஸ்தவ பெண் என்பதால் வினோத் காம்ப்ளி காம்ப்ளியும் தனது மதத்தை இந்துவிலிருந்து கிறிஸ்துவத்திற்கு மாற்றிக்கொண்டார். இதனை அடுத்து இருவரும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

2010 ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளிக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு ஜீசஸ் கிறிஸ்டியானோ காம்ப்ளி என வினோத் காம்ப்ளி பெயர் சூட்டினார். வினோத் காம்ப்ளி மட்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி இருந்தால், சச்சின், டிராவிட் ,கங்குலி, ஷேவாக் ,லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்களுக்கு நடுவில் வினோத் காம்ப்ளியின் பெயரும் இருந்திருக்கும்.

Story first published: Monday, June 26, 2023, 15:08 [IST]
Other articles published on Jun 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+