Diet: விராட் கோலியின் உணவு பழக்கங்கள்.. உடம்பு இரும்பு மாதிரி இருக்க இதான் காரணமா?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது உடல்நிலையை பராமரிக்க என்ன வகையான டயட்டில் இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி இந்திய விளையாட்டுத் துறையில் ஃபிட்னஸின் பங்கு முக்கியம் என்று எடுத்துக் கூறி பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். பழநி படிக்கட்டு போல் 8 பே உடற்கட்டுடன் இருக்கும் விராட் கோலி ஒரு காலத்தில் அசைவப் பிரியராக இருந்தவர். ஆனால் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக சைவத்திற்கு மாறி வியக்க வைத்துள்ளார். இதைதான் அண்மையில் விராட் கோலி என்ற புலி புல் மட்டுமே திங்கும் என்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார்.

அவர் எந்த அளவிற்கு ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறாரோ, அதே அளவிற்கு உணவிலும் கட்டுப்பாட்டுடன் இருந்து வருகிறார். முழுக்க முழுக்க ப்ரோடீன் நிறைந்த சத்தான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். அவஎ உணவு சாப்பிடும் தட்டு முழுவதும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்தான் இருக்கும். கீரை வகைகள், காய்கறிகள் மட்டுமே இருக்கும். காலை உணவாக மிளகுத்தூள் தூவிய முட்டை , காய்கறிகள் இருக்கும். அவர் சைவமாக இருந்தாலும் சிக்கன் எடுத்துக் கொள்கிறார்.
அவ்வபோது சாப்பிட நட்ஸ், விதைகள், குளூட்டன் இல்லாத பிரெட், டெசர்ட் வகைகளும் எடுத்துக் கொள்கிறார். இரவு உணவுக்கு ப்ரோடீன் நிறைந்த உணவாக சாப்பிடுகிறார். தினை வகைகள், தோசை, பருப்பு , பசலைக் கீரை, காய்கறிகள், சோயா, ப்ரோடீன் ஷேக்ஸ் போன்றவை சாப்பிடுகிறார். அதேபோல் பயணம் மேற்கொண்டாலும் பெரும்பாலும் அவர் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கிறார். அல்லது தனக்கு தேவையான உணவை அவரே கொண்டு செல்கிறார்.
விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் கட்டுமஸ்தான உடலுக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவார்கள் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் விராட் கோலி 90% அசைவ உணவுகளின்றிதான் டயட்டில் இருக்கிறார். அவருடைய உணவில் அசைவம் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல் முடிந்த வரை இனிப்பு உணவுகளை தவிர்க்கும் விராட் கோலி ஒரு நாளைக்கு எலுமிச்சை சாறு பிழிந்த கிரீன் டீயை 3 - 4 கப் முறை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications