Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேப்பி பர்த்டே யுவி! அன்பும் அமைதியும் கிடைக்கட்டும்.. வாழ்த்து மழையில் நனைந்த யுவராஜ் சிங்!

Recommended Video

Happy Birthday Yuvraj Singh | Yuvraj never gave up in 2011 World cup final

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய 38வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ஐசிசி, பிசிசிஐ, ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாபை சேர்ந்த யுவராஜ் சிங் 304 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 58 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். கடந்த 2011ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

கடந்த 2007ல் உலக டி20 போட்டியில் இங்கிலாந்து பௌலர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் 12 பந்துகளில் இவர் அடித்த அரைசத சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டம்

சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டம்

இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாபை சேர்ந்த யுவராஜ் சிங், தன்னுடைய கேரியரில் 304 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 58 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார்.

14 சதம்... 52 அரை சதம்

14 சதம்... 52 அரை சதம்

சிக்ஸ்களை அடிப்பதில் பெயர் பெற்ற யுவராஜ் சிங், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்கள் மற்றும் 52 அரைசதங்களை விளாசி 8701 ரன்களை அடித்துள்ளார். இதேபோல 8 அரைசதங்களை அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் 1177 ரன்களை தக்க வைத்துள்ளார்.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

கடந்த 2011ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இந்த தொடரில் தொடர் நாயகன் விருதும் இவருக்கு கிடைத்தது.

முறியடிக்கப்படாத சாதனை

முறியடிக்கப்படாத சாதனை

இதேபோல கடந்த 2007 உலக டி20 போட்டியில் இங்கிலாந்து பௌலர் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் 12 பந்துகளில் யுவராஜ் அடித்த அரைசத சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

வென்று காட்டிய யுவராஜ்

வென்று காட்டிய யுவராஜ்

இதனிடையே நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதை வென்று காட்டினார். தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய ஓய்வையும் அவர் அறிவித்தார்.

வாழ்த்து மழையில் நனையும் யுவராஜ்

வாழ்த்து மழையில் நனையும் யுவராஜ்

இந்நிலையில் தன்னுடைய 38வது பிறந்த நாளை யுவராஜ் சிங் இன்று கொண்டாடி வருகிறார். அவரை ஐசிசி, பிசிசிஐ சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையால் நனைத்து வருகின்றனர்.

வீடியோவை வெளியிட்ட ஐசிசி

யுவராஜின் பிறந்தநாளையொட்டி ஐசிசி, அவரது கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதேபோல பிசிசிஐயும் புகைப்படம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

"மகிழ்ச்சி கிடைக்க இறைவன் அருளட்டும்"

இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், யுவராஜிக்கு மகிழ்ச்சி, அன்பு, அமைதி உள்ளிட்டவை கிடைக்க கடவுள் அருளட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் தொடர் வாழ்த்து

இதேபோல, கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்களும் தங்களது பங்கிற்கு யுவராஜை வாழ்த்து மழையில் நனைய விட்டனர்.

Story first published: Thursday, December 12, 2019, 15:05 [IST]
Other articles published on Dec 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+