
திறமையான இளம் வீரர்
இந்திய அணியின் இளம் வீரர்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்ற ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கவில்லை.
குல்தீப்புடன் இணைந்த புகைப்படம்
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சக வீரர் குல்தீப் யாதவுடன் தான் இணைந்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். போட்டோஷூட் ஒன்றின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

ஏராளமான கமெண்ட்டுகள்
சஹால் பதிவிட்ட இந்த புகைப்படம் 1.34 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. ஏராளமானோர் சாஹல் மற்றும் குல்தீப் குறித்து பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவிட்டிருந்தனர்.

சஹாலை கலாய்த்த வீராங்கனை
இந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வியாட், சஹால் தன்னைவிட உயரம் குறைந்தவர் என தான் கருதுவதாக அவரை வம்பிழுத்துள்ளார். உடன் சிரிப்பு எமோஜியை போடவும் டேனியல் மறக்கவில்லை.

கோலியை கலாய்த்தவர்
இங்கிலாந்தின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வியாட், கடந்த சில வருடங்களுக்கு முன்பு விராட் கோலியிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டவர்.


Click it and Unblock the Notifications











