Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களுக்கு.. மூன்று வேளையும் 'மூக்குப்பிடிக்க' சாப்பாடு.. கேட்கும்போதே எச்சில் ஊறுதே!

மும்பை: இந்திய அணி அடுத்த மூன்றரை மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளைத் தவிர, வேறு எதுவும் விளையாடப் போவதில்லை. அதிக வேலைப்பளு மிக்க இந்த டெஸ்ட் போட்டிகளின் போது, வீரர்கள் தங்களை ஆக்டிவாக வைத்திருக்க என்னென்ன சாப்பிடுவார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

 மொத்தம் 24 நாட்கள்

மொத்தம் 24 நாட்கள்

இந்த நிலையில், இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மும்பையில் 14 நாட்கள் குவாரண்டைனில் இந்திய வீரர்கள் நேற்று (மே.19) முதல் இணைந்துள்ளனர். ஜூன் 2ம் தேதி மும்பையில் இருந்து லண்டன் செல்லும் இந்திய வீரர்கள், அங்கிருந்து போட்டி நடைபெறும் மைதானமான சவுத்தாம்ப்டன் 'Ageas Bowl' ஸ்டேடியத்திற்கு செல்கின்றனர். அங்கு 10 நாட்களுக்கு மீண்டும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 உணவுமுறை

உணவுமுறை

முதன் முதலாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். குறிப்பாக, இந்திய ரசிகர்கள். நம்மாளுங்களின் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகம். எந்நேரம் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரஷரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும், இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளையும் விளையாடவுள்ள இந்திய வீரர்களுக்கு எவ்வளவு பிரஷர் இருக்கும்? அதை மனதளவிலும், உடலளவிலும் சமாளிக்க அவர்கள் என்னென்ன உணவுமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

 வயிறுமுட்ட சாப்பிட்டால்

வயிறுமுட்ட சாப்பிட்டால்

குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளின் போது, முழுமையாக 5 நாட்கள் வீரர்கள் தினமும் விளையாட வேண்டும். காலை 9 மணிக்கு தொடங்கும் போட்டி, அப்படி இப்படி என்று மாலை 4.30 டூ 5 மணிக்கு முடியும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எதுவானாலும், அன்றைய பகல் முழுவதும் வீரர்கள் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியெனில், வயிறுமுட்ட சாப்பிட்டால் என்ன ஆகும்? அவ்வளவுதான். ஸோ, அதற்கேற்ப பக்காவான உணவுகளை டெஸ்ட் போட்டிகளில் அளவோடு எடுத்துக் கொள்கிறார்கள்.

 பழங்கள்

பழங்கள்

பெரும்பாலும் காலை உணவாக தானியங்கள், பழங்கள், பழச்சாறுகள், பால், முட்டை, ரொட்டி, இட்லி, பாஸ்தா, முளைப்பயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். மதிய உணவை பொறுத்தவரை, வறுத்த கோழி, ஆட்டிறைச்சி, பன்னீர், சூப், வெண்ணெய், சீஸ், பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறிகளை எடுத்துக் கொள்கின்றனர்.

 டீ / காபி

டீ / காபி

தேநீர் இடைவேளையின் போது, வீரர்கள் டீ / காபி சாப்பிடலாம். ஆனால், கோடைகாலத்தில் இந்திய துணைக் கண்டத்தில் விளையாடுகிறதென்றால், வீரர்கள் தங்களை ஆற்றலோடு வைத்திருக்க எனர்ஜி அல்லது ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பானங்களில் பொட்டாசியம், சோடியம், கொழுப்பு போன்றவை உள்ளன.

 ஆரோக்கிய உணவு

ஆரோக்கிய உணவு

இரவு உணவைப் பொறுத்தவரை, அதாவது அன்றை தினத்தின் ஆட்டம் முடிந்த பிறகு, வீரர்கள் சில ரெகவரி பானங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இரவு உணவில் புரதச்சத்து நிறைந்த சிக்கன், சாலட் மற்றும் சூப்களுடன் மீன் பார்பிக்யூ போன்ற உணவை எடுத்துக் கொள்கிறார்கள். எனினும், களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள்.. அதாவது நாளை மீண்டும் பேட்டிங் செய்யவேண்டிய வீரர் என்றால், குறைவான அளவிலான அதேசமயம் ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறார்கள்.

 தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நயன் மோங்கியா கூறுகையில், "வீரர்கள் தாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது அவரவர்கள் தேர்வு தான். அவரது தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அதேசமயம், ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் செய்ய களத்திற்கு செல்கிறார் என்றால், வயிறு முழுக்க சாப்பிடமாட்டார். வாழைப்பழம் அல்லது வேறு ஏதேனும் ஒரு பழத்தை மட்டுமே சாப்பிட்டிருப்பார்கள். அவர்கள் உண்ணும் அனைத்து உணவிலும் கொழுப்பு குறைவாகவும், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் இருக்கும்.

Story first published: Thursday, May 20, 2021, 18:25 [IST]
Other articles published on May 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+