Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க!

டெல்லி: அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலிக்கு முடி வெட்டி விட்டாலும் விட்டார்.. அடுத்தடுத்து மொட்டை போடுவது.. முடிவெட்டுவது என கிரிக்கெட் வீரர்கள் கிளம்பி விட்டனர்.

Recommended Video

Indian cricketers are using their time well and good

21 நாள் லாக்டவுனை சிறப்பாகவே கடைப்பிடித்து வருகிறார்கள் விளையாட்டுத் துறையினர். அதில் சந்தேகமே இல்லை.. வீட்டோடு இருப்பது ஒரு பக்கம் என்றால் சும்மா இருக்காமல் ஏதாவது செய்து கொண்டே உள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா பார்த்துப் பார்த்து முடிவெட்டி விட்ட வீடியோ வெளியானது.. விடுவார்களா மற்றவர்கள்.. அவர்களும் ஆரம்பித்து விட்டனர்.

லாக்டவுனா பிரேக் டவுனா

லாக்டவுனா பிரேக் டவுனா

கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்த நேரமெல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் வெறி பிடித்தாற்போல காட்சி தந்திருப்பார்கள். காரணம் ஐபிஎல் போட்டிகள் அனல் பறக்க போய்க் கொண்டிருக்கும். ஆனால் போட்டிகள் ரத்தாகி விட்டதால் வீரர்களும் சரி ரசிகர்களும் சரி முடங்கிப் போயுள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் வீடியோக்களாகப் போட்டுத் தள்ளி கொண்டுள்ளனர்.

முடி வெட்டி விட்ட அனுஷ்கா

முடி வெட்டி விட்ட அனுஷ்கா

சமீபத்தில் அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியை உட்கார வைத்து அழகாக முடி வெட்டி விட்டார். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே வெட்டி விட்டார் அனுஷ்கா. விராட் கோலி முகத்தில் திருப்தி தெளித்து சிதறியதைப் பார்க்க முடிந்தது. அனுஷ்காவுக்கும் கூட பெருமைதான்.. சூப்பரா வெட்டி விட்டுட்டோமே என்று. இப்போது அதே பாணியில் பலர் கிளம்பியுள்ளனர்.

மொட்டை போட்ட டேவிட் வார்னர்

மொட்டை போட்ட டேவிட் வார்னர்

அதேபோல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் தனது முடியை தானே வெட்டி வீடியோ போட்டார். ஆனால் அவர் வெறுமனே முடி வெட்டவில்லை. மாறாக மொட்டையடித்துக் கொண்டார். களப்பணியில் ஈடுபட்டு வரும் கொரோனா பணியாளர்களுக்கு இது சமர்ப்பணம் என்றும் கூறியிருந்தார். மேலும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தும் இதுபோல மொட்டையடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

டிரெட்மில்லில் ஓடும் ஜடேஜா

இது இப்படி ஓடிக் கொண்டுள்ளது மறுபக்கம் பார்த்தால் ரவீந்திர ஜடேஜா ஒரு குதிரை சவாரி வீடியோவைப் போட்டு மலரும் நினைவுகளில் மூழ்கியுள்ளார். அவர் ஒரு குதிரைப் பிரியர் ஆவார். மேலும் வீட்டில் டிரெட்மில்லில் சட்டை கூட போடாமல் உடற்பயிற்சி செய்யும் படத்தையும் போட்டுள்ளார். வியர்க்க விறுவிறுக்க டிரெட் மில்லில் ஓடி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முயற்சி செய்கிறார் ஜடேஜா.

மாப்புடன் பும்ரா

இன்னொரு பக்கம் போனால் ஜஸ்பிரீத் பும்ரா. வீட்டு வேலைகளில் செம பிசியாக உள்ளார். செடிக்கு தண்ணீர் ஊற்றுவது, வீட்டை மாப்பு வைத்து துடைப்பது என சகல வீட்டு வேலைகளிலும் ஒரு கை பார்க்கிறார். வீட்டு பணியாட்கள் வர முடியாத காரணத்தால் இதையெல்லாம் அவரே செய்கிறாராம். நல்லதுதானே.. வேலைக்கு வேலையும் ஆச்சு.. உடம்பும் வளைந்து கொடுத்தாற் போல ஆச்சு..!

எப்படி வெட்டணும் தெரியுமா

இந்தப் பக்கம் வந்தால் சஞ்சய் மஞ்ச்ரேகர் உட்கார்ந்து காய் வெட்டிக் கொண்டிருக்கிறார். என்னங்க ஆச்சு என்று பார்த்தால்.. எப்படி வெட்டணும் தெரியுமா.. கத்தி எப்படி பிடிக்கணும் தெரியுமா.. கத்தி எப்படி இருக்கணும்னாவது தெரியுமா என்று வாத்தியார் கணக்கில் உட்கார்ந்து பாடமே எடுத்திருக்கிறார். அவருக்கு முன்பு வெட்டப்பட்ட காய்களும் பரிதாபமாக கவிழ்ந்து கிடக்கின்றன. நல்ல வேலைதான்!

Story first published: Saturday, April 4, 2020, 1:06 [IST]
Other articles published on Apr 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+