For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ் சினிமாவில் கால் பதித்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் யார்? இந்த படம் எல்லாம் பார்த்தாச்சா?

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிகள் பல்வேறு வீரர்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருக்கிறார்கள். தமிழ் சினிமா என்ற சரணாலயத்தில் கிரிக்கெட் வீரர்கள் என்ற சீசன் பறவைகளும் வந்து அலங்கரித்திருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடித்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த். மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த பிரியமான தோழி என்ற படத்தில் ஸ்ரீகாந்த் கிரிக்கெட் பயிற்சியாளராக வந்து மாதவனுக்கு அட்வைஸ் வழங்கும் வேடத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ஸ்ரீகாந்த் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.

Indian cricketers Who acted in Tamil cinema industry

இதேபோன்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சடகோபன் ரமேஷ். உலக கோப்பையில் இந்திய அணிக்கு தொடக்க வீரராக இருந்த சடக்கோபன் ரமேஷ், தமிழ் சினிமாவில் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் வருவார்.

இதைப் போன்று மதகஜராஜாவில் விஷாலுக்கு நண்பராகவும், போட்டா போட்டி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹரபஜன்சிங். தமிழ் சினிமாவில் புயலாக நுழைந்த ஹர்பஜன் சிங், பிரண்ட்ஷிப் மற்றும் டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் வருண் சக்கரவர்த்தி.

தமிழ் சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என்று சிறிது காலம் உழைத்து வந்த வருண் சக்கரவர்த்தி, ஜீவா என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் கிரிக்கெட் விளையாடும் வீரராக வருவார். இதற்கு ஒரு நாளைக்கு அவர் 600 ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிவித்து இருந்தார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இர்பான் பதான். விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இர்பான் பதான் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இர்பான் கதாபாத்திரம் ரசிகர்களால் போற்றப்பட்டது. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். விஜய் சேதுபதி, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முகமது மோபி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் ரெய்னா இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரெய்னா ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அந்தப் படம் இன்னும் ஷூட்டிங் போகவில்லை.

இந்தப் பட்டியலில் எட்டாம் இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நடித்து இருக்கின்றார். லால் சலாம் என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக வரும் கபில் தேவ், ரஜினியுடன் இணைந்து சில வசனங்களை பேசி இருப்பார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். நடிகர் பிரபு நடித்த, ராஜா கைய வச்சா என்ற திரைப்படத்தில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஒரு சிறிய வேடத்தில் கிரிக்கெட் வீரராகவே வருவார்.

நடிகர் பிரபுவுக்கு காரில் லிப்ட் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இதை தவிர கோட் படத்தின் கிளைமாக்சில் தல தோனி மைதானத்திற்குள் வரும் காட்சி ஒன்று இடம்பெறும். அதில் தோனி நேரடியாக நடிக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக Lets Get Married என்ற படத்தை தயாரித்து இருந்தார்.

Story first published: Wednesday, August 27, 2025, 15:24 [IST]
Other articles published on Aug 27, 2025
English summary
Indian cricketers Who acted in Tamil cinema industry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+