சீக்கிரம் எழுந்து வா சாம்பியன்.. கடமைகள் காத்திருக்கு.. சக இந்திய வீரர்களின் உணர்ச்சிவச பதிவு
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கோர விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். புத்தாண்டு எப்படி கொண்டாடலாம் என காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
எனினும் பண்டின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறி இருப்பது சற்று நிம்மதியை தந்தாலும், திறமையான இளம் வீரரான பண்ட் அடைந்த காயம் ரசிகர்களை மனவேதனை அடைய செய்துள்ளது.
இதனால் பண்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பிரார்த்தனைகளும் ஊக்கமளிக்கும் செய்திகளும் வந்து கொண்டே இருக்கிறது.

சச்சின் உருக்கம்
இதில் சக இந்திய கிரிக்கெட் வீரர்களும் பண்டிற்காக சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில் ரிஷப் பண்ட், விரைவாக குணமடைந்து விளையாட வேண்டும். என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் அவருக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

சேவாக் அறிவுரை
பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ள பதிவில் உங்களுடைய காயங்கள் சீக்கிரமாக குணமடைந்து திரும்பி வாருங்கள். உங்களுடைய பேட்டிங் வீடியோக்களை பார்த்துக் கொண்டே ஓய்வில் இருங்கள் என்று சேவாக் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பதிவில் ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு வர வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

லட்சுமணன் பதிவு
வி வி எஸ் லக்ஷ்மன் வெளியிட்டுள்ள செய்தியில் ரிஷப் பந்திற்காக பிரார்த்தனை செய்கிறேன். ஆபத்தான நிலையில் இருந்து அவர் கடந்து விட்டார் என்று கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரிஷப் பண்ட் விரைவாக உடல் நலத்தை பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யகுமார் பிரார்த்தனை
சூரிய குமார் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில் எனது சகோதரனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். சீக்கிரம் திரும்பி வாருங்கள் சாம்பியன் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள பதிவில் ரிஷப் பண்டிற்கு அவருடைய குடும்பத்திற்கும் எனது பிரார்த்தனை நிச்சயமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முகமது சமி வெளியிட்டுள்ள பதிவில் சீக்கிரம் வாருங்கள் ரிஷப் பண்ட்இறைவன் உங்களை காப்பாற்றுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications