Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை கிண்டல் செய்த ஆஸி. சேனல்.. ஆஸி. சேனலை வாசிம் ஜாபர் மரண கலாய்..!!

மும்பை: உலகின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

கடந்த 2 ஆண்டாக ஒருநாள் போட்டியில் இந்திய அணி பெரிய அளவில் பங்கேற்கவில்லை. அதிகபட்சமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் மட்டும் தான் கவனம் செலுத்தியது.

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

இந்த நிலையில், விராட் கோலியின் டெஸ்ட் ஃபார்ம் அவரது தரத்துக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 34 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. சேனல் கிண்டல்

ஆஸி. சேனல் கிண்டல்

இதனையடுத்து ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பேட்டிங் செய்து வருவதாகவும், அவரது சராசரி இதே காலக் கட்டத்தில் விராட் கோலியை விட அதிகமாக இருப்பதாக கூறி கிண்டல் செய்தது. இது நமக்கு கோவத்தை தந்தாலும், அது உண்மையும் கூட

வாசிம் ஜாபர் பதிலடி

வாசிம் ஜாபர் பதிலடி

விராட் கோலி சராசரி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 37.17ஆக உள்ளது. ஆனால் ஸ்டார்க் சராசரி 38.63 ஆக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய சேனலின் இந்த டிவிட் விராட் கோலி ரசிகர்களிடையே கடுப்படைய செய்தது. இந்த நிலையில், கோலியை கலாய்த்த ஆஸ்திரேலிய சேனலை வச்சு செய்தார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர்

ஸ்மித் பாவம்

ஸ்மித் பாவம்

ஆஸ்திரேலிய சேனுக்கு பதிலடி தரும் விதமாக ஸ்மித்தின் ஒருநாள் போட்டியின் சராசரியையும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் நவதீப் சைனியின் ஒருநாள் போட்டியின் சராசரியையும் ஓப்பிட்டு டிவிட் போட்டுள்ளார் வாசிம் ஜாபர். நவதீப் சைனியின் சராசரி 53.50 , ஆனால் ஸ்மித்தின் சராசரி 43.34.. வாசிம் ஜாபரின் இந்த டிவிட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, 2022ஆம் ஆண்டில் விராட் கோலி தனது பழைய ஃபார்மை மீட்டு அனைவருக்கும் பதிலடி தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Story first published: Friday, January 7, 2022, 19:24 [IST]
Other articles published on Jan 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+