Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயுடுவுக்கு பதில் உலக கோப்பையில் விஜய்சங்கர் தான் விளையாடுவார்..! குடி போதையில் உளறிய ரவிசாஸ்திரி

டெல்லி: இந்திய ரசிகர் ஒருவர், இந்திய அணியின் 4வது இடத்துக்கு அம்பத்தி ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சிறந்த தேர்வு என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குடிபோதையில் தெரிவித்ததாக விக்கிபீடியாவில் எழுதியிருந்த பதிவால் கிரிக்கெட் உலகம் பரபரப்படைந்தது.

உலக கோப்பை தொடருக்காக கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே வீரர்களை அறிவித்துவிட்டன. இந்திய அணியும் அதற்கான வீரர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்துவிட்டது.

பட்டியலை அறிவித்த தினத்தில் இருந்து அது தொடர்பான விமர்சனங்களும், சர்ச்சைகளும் முடிந்தபாடில்லை. குறிப்பாக, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

 அறிவிக்கப்பட்ட அணி

அறிவிக்கப்பட்ட அணி

எதிர்பார்த்தது போலவே கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இளம் ரிஷப் பன்டுக்கு பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். 4வது வீரருக்கான ரேசில் அம்பத்தி ராயுடுவை பின்னுக்கு தள்ளி, தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அந்த இடத்துக்கு தேர்வு பெற்றார்.

 2 தமிழக வீரர்கள்

2 தமிழக வீரர்கள்

ஒரே நேரத்தில் தமிழகத்தின் 2 வீரர்கள் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். அதில் குறிப்பாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

 கடும் விமர்சனங்கள்

கடும் விமர்சனங்கள்

சமீபகாலமாக அம்பத்தி ராயுடுவின் மோசமான செயல்பாடே, விஜய் சங்கர் தேர்வாக காரணம் என்று கூறப்பட்டது. மேலும், சர்வதேச அளவில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத வீரரை, இந்திய பேட்டிங் வரிசையின் முக்கியமான இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்றும் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டன.

 3 டி கிண்டல்

3 டி கிண்டல்

விஜய் சங்கர் தேர்வு குறித்து அம்பத்தி ராயுடுவும் கேள்வி மட்டுமல்ல... கேலியும் செய்தார். தேர்வுக்குழு தலைவர் பிரசாத்தின் விளக்கத்தை கிண்டலடிக்கும் வகையில் 3 டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

அவருக்கு ஆதரவாக மேலும் ஒரு சில வீரர்கள் கருத்து கூறினர். பிசிசிஐ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அந்த தருணத்தில் அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர் ஆகியோரோடு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்தார்.

 விக்கிபீடியா பதிவு

விக்கிபீடியா பதிவு

இந்நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கரின் விக்கிபீடியா பக்கத்தில் இடம் பெற்றிருந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதில் இந்திய ரசிகர் ஒருவர் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

 குடிபோதையில் ரவி சாஸ்திரி

குடிபோதையில் ரவி சாஸ்திரி

இந்திய ரசிகர் அதில் கூறியிருப்பதாவது:இந்திய அணியின் 4வது இடத்துக்கு அம்பத்தி ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சிறந்த தேர்வு. இந்த விஷயத்தை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குடிபோதையில் இருந்த போது தெரிவித்ததாக பதிவிட்டார். இந்த பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, 6 நிமிடத்தில் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, விஜய் சங்கரின் விக்கிபீடிய பக்கம் சரி செய்யப்பட்டது.

Story first published: Friday, April 26, 2019, 13:08 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+