இந்தியா, பாக் போட்டியில் நடந்த அந்த சம்பவம்… 4 நாட்களுக்கு பிறகு லீக்கானது.. கவனிச்சீங்களா?
Recommended Video
மான்செஸ்டர்: உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை விட, அந்த ஆட்டத்தில் இணைந்த காதல் ஜோடியை பற்றிய செய்தி தான் இப்போது வைரலாகி இருக்கிறது.
இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மட்டுமே தோல்வியை சந்திக்காத அணிகளாக உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சவுதாம்டனில் நடக்கவுள்ள லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக உலகமே எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா வென்று, உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தமது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது. ஆனால் அந்த போட்டியில் கிரிக்கெட் போட்டியை விட காதல் நெஞ்சங்கள் இருவர் இணைந்த நிகழ்வு தற்போது வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

அரங்கத்தில் காதல் ஜோடி
போட்டியை உலகமே நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டு இருக்க, மைதானத்தில் காதலில் ஒரு ஜோடி இணைந்திருக்கிறது. அதாவது போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அந்தந்த அணியினரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

ஜாலி ரசிகர்கள்
அரங்கத்தின் ஒரு பகுதியில், இந்திய அணியின் ஆதரவாளர்களும் திரண்டு உற்சாக கைத்தட்டல்களை எழுப்பி வருகின்றனர். அவர்களில் இந்திய அணிக்கு ஆதரவித்து ஒரு குழு ஜாலியாக ஆர்ப்பரிக்கிறது.
காதலை சொன்ன ரசிகர்
அப்போது, தான் காதலிக்கும் பெண்ணிடம் இந்திய ரசிகர் காதலை தெரிவித்தார். அந்த பெண்ணும், ஒரு கணம் என்ன செய்வது தவிக்க, பின் இருவரும் அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் ஆரவாரத்திற்கு நடுவில் இவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர்.

டுவிட்டரில் வெளியீடு
இதை கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பின் அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்றைய போட்டி பற்றிய செய்திகளை விட, இந்த காதல் வீடியோ தற்போது சமூக வலை தளத்தில் ஏகத்துக்கும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications