இந்திய ரசிகர்கள் சில்லித்தனமானவர்கள்.. !! பிரபல முன்னாள் வீரரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை
Recommended Video

லண்டன்: இந்திய ரசிகர்கள் சில்லித்தனமானவர்கள் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ள கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய அணி தனது பரம வைரியான பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் உருவ மொம்மையை எரித்தனர்.
தொலைக்காட்சி பெட்டிகளை தெருக்களில் வீசி உடைத்தனர். இன்னும் பல்வேறு வடிவங்களில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2003ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த போதும், இந்திய வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் சில கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
இந்திய ரசிகர்கள் சில நேரம் தங்களின் பொறுமையை இழந்து விடுகின்றனர். உருவ மொம்மை எரிப்பு, கல் வீச்சு என சில்லித்தனமாக நடந்து கொள்கின்றனர். உங்கள் அணி வீரர்கள் இங்கு தோற்க வேண்டும் என வரவில்லை.
வெற்றி பெற வேண்டும் என்று தான் வருகின்றனர். இன்று ஹீரோவாக உள்ளவர் நாளை ஜீரோவாக போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications