Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்போது வீரர்கள் கதறினர்.. இப்போது ரசிகர்கள் கதறுகிறார்கள்...!

சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய ரசிகர்கள் கதறி அழுதனர்.

இந்தியா தோல்வியைத் தழுவியதற்காக சிட்னி மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்திய அணி இறுதிக்கு முன்னேறாததால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டனர்.

பரிதாபத் தோல்வி

பரிதாபத் தோல்வி

329 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வியை தழுவியது.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி

வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

தென் ஆப்பிரிக்காவுக்கு அப்படி

தென் ஆப்பிரிக்காவுக்கு அப்படி

முன்னதாக, உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்ரிக்கா தோற்று வெளியேறிய போது வீரர்களே கதறி அழுதனர்.

நமக்கு இப்படி

நமக்கு இப்படி

ஆனால் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீரர்கள் யாருமே அழுதது போலத் தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள்தான் அழுது தீர்த்தனர்.

அது சரி... ஒவ்வொருவருக்கும் ஒரு பீலிங்!

Story first published: Friday, March 27, 2015, 7:40 [IST]
Other articles published on Mar 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+