
ரன் அவுட் சர்ச்சை
இந்நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க், தேவையின்றி இந்தியாவை சீண்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 3வது டி20 போட்டியில், இங்கிலாந்து இன்னிங்ஸின் போது பட்லர் விதிமுறையை மீறியுள்ளார். 5வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசுவதற்கு முன்னதாகவே, பேட்டிங்கின் மறுமுனையில் இருந்த ஜாஸ் பட்லர் வெள்ளைக்கோட்டில் இருந்து தாண்டி வந்ததாக தெரிகிறது.

ஸ்டார்க் எச்சரிக்கை
தொடர்ச்சியாக பட்லர் விதிமுறையை மீறிய நிலையில், மிட்செல் ஸ்டார்க் மன்கட் முறையில் ரன் அவுட் செய்துவிடுவது போல சைகை காட்டி எச்சரித்தார். அப்போது அவர், " மன்கட் செய்வதற்கு நான் தீப்தி சர்மா கிடையாது. ஆனால் என்னாலும் அதை செய்ய முடியும், இப்படியே செய்தால் அதையும் செய்வேன் என பட்லருக்கு அவர் எச்சரிக்கை கொடுத்தார்.

ரசிகர்கள் கோபம்
இதுகுறித்த தெளிவான ஸ்டம்ப் மைக் ஆடியோ வெளியானதால், இந்திய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எச்சரிக்கை கொடுத்ததோடு நின்றிருக்க வேண்டும். ஆனால் தேவையின்றி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா குறித்து பேசியது தவறான ஒன்று. குறைவாக எடை போடாதீர்கள் என ஸ்டார்க்-ஐ மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

பிரச்சினை என்ன
சமீபத்தில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தார். அவர் நியாயமின்றி நடந்துக்கொண்டதாக கூறி இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்களும் விமர்சித்தன. ஆனால் இது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டது தான் என ரசிகர்களும் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











