Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயா.. தயவு செய்து சப்போர்ட் பண்ணுங்கய்யா.. ரசிகர்களிடம் ஆஸி.கேப்டன் கிளார்க் கெஞ்சல்

சிட்னி: உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்தியாவும் -ஆஸ்திரேலியாவும் வருகிற 26ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்தமைதானம் 42 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து காணமுடியும்.இந்த போட்டிக்கான சுமார் 70 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கி உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்திய துணை கண்டத்தில் இருந்தும் இந்திய ஆதரவாளர்கள் சிட்னிக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதிகவிலை டிக்கெட்

அதிகவிலை டிக்கெட்

டிக்கெட் ரீசேல்ஸ் விற்பனையும் களைகட்டியுள்ளது. இந்த டிக்கெட்டுகள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ரசிகர் ஆர்மி அமைப்பு

ரசிகர் ஆர்மி அமைப்பு

சுவாமி ஆர்மி' என்ற பெயரில், இந்திய ரசிகர்கள் குழு, இந்திய அணி ஆடும் ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று, வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

சிட்னியில் மினி இந்தியா

சிட்னியில் மினி இந்தியா

இதன் அமைப்பாளர் கார்த்தி கூறுகையில், ‘‘என்னுடைய கணிப்புப்படி சிட்னி மைதானத்தில் எண்ணிலடங்கா இந்திய ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இந்திய துணை கண்டத்தின் சூழல் சிட்னியில் ஏற்படும். இது விந்தையான ஒன்றாக இருக்கும்,'' என்றார்.

கிளார்க் கெஞ்சல்

கிளார்க் கெஞ்சல்

இந்தநிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது டிவிட்டரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கு வந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். மேலும் கோல்டுஅவுட் (#goldout)என்ற ஹேஸ்டேக் உருவாக்கி அதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுஉள்ளனர்.

Story first published: Tuesday, March 24, 2015, 8:56 [IST]
Other articles published on Mar 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+