நி்யூசிலாந்துக்கு ஆதரவாக கிளம்பிய இந்திய ரசிகர்கள்!
சென்னை: ஆஸ்திரேலியா, நி்யசிலாந்து இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெரும்பாலான இந்திய ரசிகர்கள், நியூசிலாந்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டிவிகளில் போட்டியைப் பார்க்கும் ரசிகர்களும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி நியூசிலாந்துக்கு ஆதரவு கொடி கட்டிப் பறக்கிறது.
நியூசிலாந்தே இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும். அவர்களது கேப்டன் மெக்கல்லம் பகிரங்கமாக இந்தியாவின் ஆதரவைக் கேட்டிருக்காவிட்டாலும் கூட நாங்கள் நியூசிலாந்துக்கே ஆதரவு தெரிவித்திருப்போம் என்றும் பல ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியா நம்மைத் தோற்கடித்தது என்ற கோபம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம், ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து பெட்டர் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு பட்டம் புதிதல்ல. ஆனால் நியூசிலாந்து வென்றால் அதற்கு இது வரலாறாகும். அந்த அடிப்படையிலும் பலர் நியூசிலாந்தை ஆதரிக்கின்றனர்.

இன்னொரு மேட்டரும் உள்ளது. அதாவது நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுபவர். எனவே தமிழக ரசிகர்கள் பெரும்பாலானோர் நியூசிலாந்தை ஆதரிக்கின்றனராம்.
பரவாயில்லை.. புண்பட்ட மனதை இப்படி பண்படுத்திக் கொள்வதும் ஆரோக்கியமானதுதான்.


Click it and Unblock the Notifications