Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''பை பை பாகிஸ்தான்''..''கொஞ்ச பேச்சாடா பேசுனீங்க''.. வச்சி செய்யும் இந்திய ரசிகர்கள்.. தரமான சம்பவம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி செமி பைனலில் தோற்று நடையை கட்டி விட்டது.

Recommended Video

How Pakistan Lost To Australia In World Cup Semi Final | OneIndia Tamil

இதற்கு அடுத்தபடியாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணி பாகிஸ்தான். இந்த தொடரில் எந்தவொரு தோல்வியும் சந்திக்காத பாகிஸ்தான் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எளிதில் சாய்த்து விடும் என்று கூறப்பட்டது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அதற்கு ஏற்றார்போல்தான் ஆடியது. பாபர் அசாம்-முகமது ரிஸ்வான் கூட்டணி வழக்கம்போல் வெளுத்து வாங்கியது. பாபர் அசாம் 39 ரன்களில் அவுட்டாக, கடும் காய்ச்சலுக்கு பிறகும் களமிறங்கி அற்புதமாக ஆடிய முகமது ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்தார். இறுதியில் பக்கர் ஜமான் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சிக்ஸர் மழை பொழிய 20 ஓவர்களில் 176 என்ற சவாலான இலக்கை பாகிஸ்தான் அளித்தது.

 வேட்டையாடிய மேத்யூ வேட்

வேட்டையாடிய மேத்யூ வேட்

பின்னர் பவுலிங் போட்ட பாகிஸ்தான் பந்துவீச்சில் மிரட்டியது. இந்தியாவை ஆட்டம் காண செய்த ஷாகின் அப்ரிடி பின்ச்சை டக் அவுட்டில் வெளியேற்றினார். வார்னர் சில சிக்ஸர்களை பறக்க விட்டாலும் ஷதாப் கான் ஒருபக்கம் விக்கெட் வேட்டை நடத்தினார். மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், வார்னர் என்று வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பினார் ஷதாப் கான். ஆஸ்திரேலியா 96-5 என்று தடுமாறி கொண்டிருந்தது. ஆனால் மேத்யூ வேட்டும், மார்கஸ் ஸ்டோனிசும் பாகிஸ்தான் பவுலர்கள் நம்பிக்கையை சீர்குலைத்தனர்.

இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த மேட்ச்சின் தொடக்கத்திலும், இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஹீரோவாக விளங்கிய ஷாகின் அப்ரிடி இப்படி வில்லனாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஷாகின் அப்ரிடி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி தங்கள் அணியை பைனலுக்கு அழைத்து சென்று விட்டார் மேத்யூ வேட். ஆஸ்திரேலியாவின் அதிரடியான வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்களோ இல்லையோ இந்திய அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வட்டியும், முதலுமாக பதிலடி

வட்டியும், முதலுமாக பதிலடி

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றபோது அந்த நாட்டு ரசிகர்கள் இந்திய அணி வீரர்கள், ரசிகர்களை கடுமையாக கேலி செய்தனர். இதன்பிறகு நியூஸிலாந்திடம் தோற்று இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியபோது ''பை பை இந்தியா'' என்று அநியாயத்துக்கு இந்திய அணியை பாகிஸ்தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். தற்போது பாகிஸ்தான் தோற்று இருப்பதால் இந்திய ரசிகர்கள், நெட்டிசன்கள் பாகிஸ்தானுக்கு வட்டியும், முதலுமாக சேர்த்து கொடுத்து வருகின்றனர்.

'பை பை பாகிஸ்தான்'

'பை பை பாகிஸ்தான்'

''பை பை பாகிஸ்தான்'' ''என்னா பேச்சு பேசுனீங்கடா இப்ப கிளப்புங்க'' என்று கேலி, கிண்டல் படங்களுடன் பாகிஸ்தான் நெட்டிசன்களை வச்சி செய்து வருகின்றனர் இந்தியன் பேன்ஸ். ''இப்பதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கு''நமக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு ரெண்டு கண் போகணும்'' என்றெல்லாம் பதிவு போட்டு பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Story first published: Friday, November 12, 2021, 15:59 [IST]
Other articles published on Nov 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+