Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''தெய்வமே ரொம்ப நன்றி தெய்வமே''.. கேட்ச் டிராப் செய்த ஹஸன் அலியை படுத்தி எடுக்கும் நெட்டிசன்கள்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை பைனல் வரை வந்து விட்டது. கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா முதல் சுற்றிலும், இங்கிலாந்து செமி பைனலில் வெளியேறி விட்டது.

Recommended Video

How Pakistan Lost To Australia In World Cup Semi Final | OneIndia Tamil

இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக அனைவரும் எதிர்பார்த்த ஒரு அணி பாகிஸ்தான். நேற்று நடந்த இரண்டாவது செமி பைனலில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அதிரடியில் வெளுத்து கட்டியது.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

ஒருபக்கம் பாபர் அசாம் தனது டிரேட் மார்க் ஷாட்களை ஆட முகமது ரிஸ்வான் நிதானம் காட்டினார்.

பாபர் அசாம் 39 ரன்களில் அவுட்டாக இதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்தார். இறுதியில் பக்கர் ஜமான் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 176 என்ற சவாலான ஸ்கோரை எட்ட வைத்தார்.

நிலைகுலைந்து போனது

இமாலய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா பாகிஸ்தான் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. ஷாகின் அப்ரிடி ஓவரில் பின்ச் டக் அவுட்டானார். வார்னர் சில சிக்ஸர்களை பறக்க விட்டார். ஆனாலும் சுழலில் மிரட்டிய ஷதாப் கான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், வார்னர் என்று வரிசையாக அவுட் செய்தார். இதனால் ஆஸ்திரேலியா 96-5 என்று நிலைகுலைந்து போனது. ஆனால் மேத்யூ வேட்டும், மார்கஸ் ஸ்டோனிசும் சரிந்து கிடந்த அணியை தூக்கி நிறுத்தினார்கள்.

மேத்யூ வேட் மாயாஜாலம்

இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்டது. புயல் வேக பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி 19-வது ஓவரை வீசினார். ஆனால் அவரது பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியா அணியை பைனலுக்கு கொண்டு சென்றார் மேத்யூ வேட். ஆனால் இந்த சிக்ஸர்களுக்கு முன்னதாக மேத்யூ வேட் அவுட்டாக வேண்டியது. அதாவது ஷாகின் அப்ரிடி பந்தை மேத்யூ வேட் தூக்கியடித்தபோது பந்து ஹசன் அலியை நோக்கி சென்றது.

ஹசன் அலி தவற விட்ட கேட்ச்

ஆனால் எளிதான அந்த கேட்சை ஹசன் அலி தவற விட்டார். இந்த கேட்ச் டிராப்பே பாகிஸ்தான் தோல்வி அடைய முழு காரணமாகி விட்டது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஹசன் அலியை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இதேபோல் பாகிஸ்தான் தோல்வியை கொண்டாடி வரும் இந்திய ரசிகர்களும், நெட்டிசன்களும் கேட்சை விட்ட ஹசன் அலியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் ட்ரோல்

'பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. இதில் கேக் வெட்டி கொண்டாடி மகிழும் சில வீரர்கள் ஹசன் அலிக்கு கேக் கொடுக்காமல் ஏமாற்றி விளையாட்டு காட்டுகின்றனர். இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர் ''ஹசன் அலி கேட்சை விட்டதுக்கு இதுதான் காரணம்'' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் 12-வது வீரர்

ஹசன் அலி உடல் முழுவதும் கிரிக்கெட் பேட்ஸ்கள் கட்டப்பட்டதுபோல் மார்பிங் செய்யப்பட்ட ஒரு போட்டோவை வெளியிட்ட ஒரு நெட்டிசன், 'ஹசன்அலி பாகிஸ்தானுக்கு இப்படிதான் செல்கிறார்' என்று பதிவிட்டுள்ளார். ''இந்த முக்கியமான கேட்ச்சை விட்டது ஹசன்அலிக்கு வாழ்நாள் முழுவதும் வேதனையை தரும் என்றும் ஹஸன் அலி ஆஸ்திரேலியா அணியின் 12-வது வீரராக விளையாடினர் என்றும் நெட்டிசன்கள் அவரை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு சிலர் ''இந்தியா சார்பாக உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.. தெய்வமே ரொம்ப நன்றி தெய்வமே'' என்றும் கேலி, கிண்டலுமாக ட்வீட் போட்டு வருகின்றனர். மொத்தத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு ஹஸன் அலி நிலைமை பாவம்தான்.

Story first published: Friday, November 12, 2021, 16:05 [IST]
Other articles published on Nov 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+