Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் தோத்தா இப்படியா பண்ணுவீங்க…!! என்னா கோபம் அவருக்கு..? வைரல் வீடியோ

Recommended Video

பாகிஸ்தான் தோத்தா இப்படியா பண்ணுவீங்க… வைரல் வீடியோ

மான்செஸ்டர்: இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானின் தோல்வியை கிண்டல் செய்து வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சக்கை போடு, போடுகின்றன.

கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா,பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடந்தது. காயமடைந்த தவான் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவருக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப் பட்டார்.

இதையடுத்து டாஸ் வென்ற பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது பவுலிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித்,ராகுல் ஜோடி பொறுமையாகவே ஆடியது. அருமையான தொடக்கத்தினால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 100 ரன்களைஎ எட்டியது. ஹிட் மேன் ரோகித் 140 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது.

பாக். தோல்வி

பாக். தோல்வி

கடின இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய பாகிஸ்தான், இந்திய பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டை பறி கொடுத்தனர். மழையும் ஒரு பக்கம் பெய்ய.... 40 ஓவர்களில் பாகிஸ்தான், 6 விக்கெட்டுக்கு 212 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டினர்.

ட்ரோல் வீடியோ

ட்ரோல் வீடியோ

உலக கோப்பையில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதே இல்லை என்பதை மையப்படுத்தி ஆனந்த கூத்தாடினர். நேற்றைய முக்கிய போட்டிக்கு முன்னதாக, அபிநந்தனை சித்தரித்து வெளியிட்ட வீடியோ, நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக பல்வேறு ட்ரோல் வீடியோகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

உடைக்கப்பட்ட டிவி

உடைக்கப்பட்ட டிவி

அதில் ஒரு வீடியோ ஏகத்துக்கும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வீடியோவில் இருப்பவர் டிவியை அடித்து, உதைத்து ஆவேசப்படுவது போல தொடங்குகிறது. விஷயம் இது தான்... கூடைப்பந்து போட்டியில் தமது அணி தோற்று விடுகிறது.

கோபமான ரசிகர்

அதன் ரசிகர் ஒருவர் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து அவர் செய்யும் காரியம் அப்பப்பா... ஏற்றுக் கொள்ள முடியாதது. டிவியை அடித்து உதைத்து தூள், தூளாக்கிறார். கம்பியூட்டரை காலி செய்கிறார். தடுக்க வந்த நபரையும் நைய புடைக்கிறார்.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

இந்த வீடியோவை பகிர்ந்த அந்த அன்பர், இந்தியாவுக்கு எதிரான பாக். போட்டியில் தோல்விக்கு பிறகு.. ஒவ்வொரு பாகிஸ்தான் ரசிகரின் நிலையும் இப்படித் தான் என்று கிண்டலடித்து இருக்கிறார். தற்போது, சமூக வலைத் தளங்களில் இந்த வீடியோ தான் ஏகத்துக்கும் ஹிட்டடித்து இருக்கிறது.

Story first published: Monday, June 17, 2019, 16:10 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+