Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

35 வயதில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஓய்வு அறிவிப்பு.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற வருண் ஆரோன்

ராஞ்சி: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளராக இருந்த வருண் ஆரோன் ஒட்டுமொத்த தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவருக்கு வயது 35 வயது தான் ஆகிறது. அவர் இந்திய அணிக்காக 2011 இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகி இருந்தார்.

இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளிலும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் வருண் ஆரோன். அவர் டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 103 இன்னிங்ஸ்களில் 173 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

india varun aaron

இந்திய அணிக்காக கடைசியாக 2015 ஆம் ஆண்டில் விளையாடி இருந்தார் வருண் ஆரோன். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி ஆடி வந்தார். அவர் உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

டெல்லி மற்றும் பரோடா ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவர் 52 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளில் வருண் ஆரோன் இடம் பெற்று இருந்தார்.

அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. தற்போது நடைபெற்று வரும் 2024-25 விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் ஜார்கண்ட் அணிக்காக ஆடினார். அத்துடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள அவர் முடிவு செய்து இருக்கிறார். வருண் ஆரோன் அண்டர் 19 காலத்தில் இருந்தே சிறப்பாக வேகப் பந்து வீசி வந்தார்.

வேகப் பந்துவீச்சாளராக இருப்பதால் பல முறை காயங்களையும் எதிர்கொண்டு இருக்கிறார். இனியும் கிரிக்கெட்டில் தொடர்வது கடினம் என்ற நிலையில் அவர் ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் வருண் ஆரோன். இனி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உள்ளதாக கூறி இருக்கிறார் வருண் ஆரோன்.

Story first published: Friday, January 10, 2025, 14:59 [IST]
Other articles published on Jan 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+