For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிரணி பேட்ஸ்மேன்களின் ஈகோவை பதம் பார்க்கும் இந்திய வீச்சாளர்கள் - பில் சைமன்ஸ்!

Recommended Video

இந்திய பவுலர்களை பாராட்டிய வெ.இண்டீஸ் பயிற்சியாளர் | Indian Pacers doing Amazingly

லக்னோ : இந்திய வேகப்பந்து விச்சாளர்கள் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை குஷியாக்குவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சைமன்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்களை தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியே இதற்கு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற பந்துவீச்சாளர்கள், எதிரணி பேட்ஸ்மேன்களின் ஈகோவை பதம் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே வரியில் பரபரப்பை கிளப்பிய தோனி.. இந்திய அணிக்கு ஆடுவது பற்றி அதிர வைக்கும் பதில்!ஒரே வரியில் பரபரப்பை கிளப்பிய தோனி.. இந்திய அணிக்கு ஆடுவது பற்றி அதிர வைக்கும் பதில்!

 டிசம்பர் 6ம் தேதி துவக்கம்

டிசம்பர் 6ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் இந்தியாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 6ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

 ஆர்வமாக காத்திருப்பதாக பேட்டி

ஆர்வமாக காத்திருப்பதாக பேட்டி

இந்த போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசக்கூடிய பந்துகளை தான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் பில் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

 உலக கிரிக்கெட் ரசிகர்கள் குஷி

உலக கிரிக்கெட் ரசிகர்கள் குஷி

இந்தியாவின் வேகப்பந்து விச்சாளர்கள் தங்களது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை குஷியாக்கி வருவதாகவும் சைமன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 பகலிரவு போட்டியே உதாரணம்

பகலிரவு போட்டியே உதாரணம்

இந்தியாவின் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் ஸ்பின்னர்கள் தங்களது திறமையை காட்டுவதற்கு வாய்ப்பளிக்காமல் ஆக்கிரமிக்கின்றனர் என்று தெரிவித்த சைமன், சமீபத்தில் இந்தியாவில் விளையாடப்பட்ட பகலிரவு போட்டியே இதற்கு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தார்.

 சைமன் கருத்து

சைமன் கருத்து

இந்தியாவில் விளையாடப்படும் போட்டிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் விளையாடப்படும் போட்டிகளிலும் உலகத்தர பேட்ஸ்மேன்களின் ஈகோவை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதம் பார்ப்பதாகவும் சைமன் குறிப்பிட்டுள்ளார்.

 எதிரணியில் சிறந்த பௌலர்கள் வேண்டும்

எதிரணியில் சிறந்த பௌலர்கள் வேண்டும்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 90 மைல் வேகத்தில் தங்களது பௌலிங்கை போடுவதாகவும் சைமன் தெரிவித்துள்ளார். இந்தியாவை வீழ்த்த சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் எதிரணியில் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 ஆமோதிக்கும் சைமன்

ஆமோதிக்கும் சைமன்

டி20 போட்டிகளை போல டெஸ்ட் கிரிக்கெட்டையும் மேம்படுத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ள கருத்தை ஆமோதித்துள்ள பில் சைமன்ஸ், இதன்மூலம் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தை மைதானத்திற்கு வரவழைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, November 28, 2019, 16:57 [IST]
Other articles published on Nov 28, 2019
English summary
West Indies Coach Phil Simmons says that Indian Pacers doing Amazingly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X