Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”கொல்கத்தாவின் இளவரசன்” சவுரவ் கங்குலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மிரளும் ரசிகர்கள்!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் மிகமுக்கியமானவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் ஆக்ரோஷத்தை முதல்முறையாக களத்தில் வெளிக் கொண்டு வந்த கேப்டனாக கங்குலி எப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

அதேபோல் கங்குலி கேப்டன்சி கீழ் உருவாக்கப்பட்ட வீரர்களே 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ தலைவராகவும் கங்குலி ஏராளமான பணிகளை செய்துள்ளார். இந்த நிலையில் சவுரவ் கங்குலி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Indian Former Captain Sourav Ganguly Net worth and Investments

கொல்கத்தாவின் இளவரசன் என்று கொண்டாடப்படும் கங்குலி 2008ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தாலும், அவரின் பொருளாதார வளர்ச்சியில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை. தொடர்ந்து அவரின் சொத்து மதிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொல்கத்தா நகரத்தில் கங்குலியின் குடும்பம் இன்றும் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக உள்ளது.

கொல்கத்தாவில் வசித்து வரும் கங்குலி, ரூ.7 கோடி மதிப்பில் சொந்த வீடு கட்டியுள்ளார். அதேபோல் லண்டன் நகரத்தில் இரு அறைகளை கொண்ட வீடு ஒன்று கங்குலிக்கு சொந்தமாக உள்ளது. அதேபோல் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடஸ் என்று 6 விலையுயர்ந்த கார்கள் கங்குலியிடம் உள்ளது. அதேபோல் விலையுயந்த இரண்டு பைக்களையும் கங்குலி வைத்துள்ளார். அவ்வப்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்திற்கு பைக்கில் வைத்து ஆச்சரியம் கொடுப்பார்.

Indian Former Captain Sourav Ganguly Net worth and Investments

அதேபோல் ஓய்வுக்கு பின்னரும் சர்வதேச அளவில் 11 நிறுவனங்களின் விளம்பர தூதராக சவுரவ் கங்குலி செயல்பட்டு வருகிறார். வீக்கோ, லாய்ட் ரோப்ஸ், பந்தன் வங்கி, பூமா என்று ஏராளமான நிறுவனங்களின் விளம்பரப் பணிகளில் கங்குலி ஈடுபட்டு வருகிறார். அதேபோல் கல்வி தொடர்பான தொழிற்நுட்ப விவகாரங்களில் கங்குலி முதலீடுகளை செய்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வர்ணனையாளர் என்று பிரத்யேக வருமானத்தையும் ஈட்டு வருகிறார். இதன் மூலமாக சவுரவ் கங்குலியின் சொத்து மதிப்பு ரூ.634 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்று சுமார் 12 ஆண்டுகள் கடந்தும் சவுரவ் கங்குலியின் வருமானத்தில் குறைவில்லாமல் இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, July 8, 2023, 10:31 [IST]
Other articles published on Jul 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+