Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டின் நாக் அவுட் ஸ்பெஷலிஸ்ட்.. யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மொகாலி: இந்திய அணி 2 ஐசிசி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். 17 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங், 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல மிகமுக்கிய காரணமாக அமைந்தார். இந்திய அணியின் ஃபீல்டிங் தற்போது உச்சத்தில் இருப்பதற்கு மிகமுக்கிய அடித்தளம் அமைத்த வீரர்களில் யுவராஜ் சிங்.

Indian former Cricketer Yuvraj Singh net worth is around Rs.291 Crores with Numerous Brand Endorsement

2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த யுவ்ராஜ் சிங், அதன்பின் இளம் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரின் வளர்ச்சியிலும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றி வருகிறார். அதேபோல் நடிகை ஹேசல் கீச்சை திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இந்த நிலையில் யுவராஜ் சிங் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். அதில் 2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மட்டும் ஐபிஎல் தொடர் மூலமாக சுமார் ரூ.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்தில் மட்டும் மாதம் ரூ.1 கோடிக்கும் அதிக வருவாய் ஈட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பெப்சி, ரிபோக், பிர்லா சன் லைஃப், ராயல் மெகா ஸ்டாக், லாரஸ் & பென்ஸ், வெர்ல்பூல், கேட்பரி, ரீவைட்டல் மற்றும் எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக யுவராஜ் சிங் செயல்பட்டுள்ளார். அதேபோல் 2022ஆம் ஆண்டுக்கு பின் ஏசியன் பெயிண்ட்ஸ், மாஸ்டர் கார்ட் இந்தியா, சாம்சனைட், பூமா, 1xபெட், பிரைம் வீடியோ, அமேசான் மினி டிவி உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பர தூதராக யுவராஜ் சிங் செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் சண்டிகரில் ரூ.5.2 கோடியில் வீடு, மும்பையில் ரூ.60 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பிளாட், அதேபோல் பல்வேறு இடங்களில் ரூ.40 கோடிக்கும் அதிகமான சொத்து வாங்கி குவித்துள்ளார். அதேபோல் அவ்டி க்யூ5, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பெண்ட்லி காண்டினெண்டல் உள்ளிட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை வாங்கியுள்ளார். அதேபோல் யுவ்ராஜ் சிங் செண்டர் ஆஃப் எக்ஸ்செலன்ஸ் என்ற கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2,500க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் யுவ்ராஜ் சிங்கின் சொத்து மதிப்பு 39 சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.291.74 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, December 12, 2023, 9:05 [IST]
Other articles published on Dec 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+