Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அயர்லாந்து டி20 தொடர்.. பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இல்லையாம்.. பிசிசிஐ எடுத்த சரியான முடிவு!

மும்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்றுள்ள நிலையில், சொந்த மண்ணில் பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராகி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதில் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கு பின் இந்திய அணி உடனடியாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Indian Head Coach Rahul Dravid to be rested for the Ireland T20 Series

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அடுத்த 5வது நாளில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தமாக 8 டி20 போட்டிகளில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அயர்லாந்து டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் டப்ளின் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவினருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அயர்லாந்து தொடருக்கு பின் இந்திய அணிக்கு எந்த ஓய்வும் வழங்குவதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை தொடர்கள் தொடர்ச்சியாக நடக்கவுள்ளன. இதனால் பயிற்சியாளர்களுக்கு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் நீண்ட காலமாக என்சிஏவில் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்காக விவிஎஸ் லக்‌ஷ்மண் பயணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Monday, July 17, 2023, 7:28 [IST]
Other articles published on Jul 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+