Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தன்னுடைய உடற்தகுதி குறித்து தோனிக்கு மட்டுமே தெரியும்.. கோச் அதிரடி!

டெல்லி : அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தன்னுடைய உடல் தகுதியாக உள்ளதா என்பது குறித்து மகேந்திர சிங் தோனிக்கே தெரியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் கீப்பராக கே.எல். ராகுல் சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் குறித்து அனைவருமே அதிகமாக பேசிவிட்ட நிலையில், அவர் தற்போதைய நிலையில், மீண்டும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாட திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அடுத்த ஆண்டில் நடைபெறுகிறது

அடுத்த ஆண்டில் நடைபெறுகிறது

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியை இந்தியா வெற்றிக் கொண்டுள்ள போதிலும் டி20 தரவரிசையில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றுவதற்காக இந்தியா தீவிரம் காட்டும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

 தோனி குறித்து ரவி சாஸ்திரி

தோனி குறித்து ரவி சாஸ்திரி

சர்வதேச போட்டிகளில் இருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி விலகியுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு அவரது உடல் தகுதியானதாக உள்ளதா என்பது குறித்து அவருக்குதான் தெரியும் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 புதிய மனநிலையுடன் விளையாட வேண்டும்

புதிய மனநிலையுடன் விளையாட வேண்டும்

ஐபிஎல்லில் தோனி விளையாடவுள்ள நிலையில், அந்த தொடருக்கு பிறகு, புதிய மனநிலையுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

 உள்ளூர் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டும்

உள்ளூர் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டும்

ரிஷப் பந்திற்கு தற்போது தேவையானது அமைதியான சூழல் மட்டுமே என்ற தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி அவர், தன்னுடைய திறமையை முழுமையாக உணர, மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 தன்னை உணரும் நிலை வரும்

தன்னை உணரும் நிலை வரும்

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மோசமான விஷயமில்லை என்று கூறிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதால், தன்னுடைய உண்மையான பலத்தை உணர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 வலுவான வீரராக உருமாறுவார்

வலுவான வீரராக உருமாறுவார்

ரிஷப் பந்த், 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ இந்திய அணியிலிருந்து விலகி தன்னை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அதன்பின்பு வலிமையான வீரராக அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக் காட்டியுள்ளார். அவருக்கு காலம் அளிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தீயாய் உருமாறி அணியில் விளையாடுவார் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார்.

"கே.எல். ராகுலே சிறந்த தேர்வு"

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பிங்கிற்கான சிறந்த தேர்வாக கே.எல்.ராகுல் இருப்பார் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதை நிரூபிப்பாரா என்பதற்கான விடை அவரிடம்தான் உள்ளது என்றும் சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 15, 2019, 14:22 [IST]
Other articles published on Dec 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+