Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை ஆளுக்கு பாதி… நியூசிலாந்துக்கும் உரிமை உண்டு.. ஒரு வழியாக வாழ்த்திய அவர்

லண்டன்: உலக கோப்பையில் சரிபாதி உரிமை, நியூசிலாந்துக்கும் உள்ளது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலக கோப்பை இறுதியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் இலக்கை துரத்திச் சென்ற இங்கிலாந்து 241 ரன்கள் எடுக்க போட்டி சமநிலையில் முடிந்தது.

அதனால், யார் சாம்பியன் என்று முடிவெடுக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப் பட்டது. அந்த முறையும் சமனில் முடிவடைந்ததால், இரு அணிகளில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ளவர்கள் என்ற கணக்கின்படி வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டது.

வெற்றியை தந்த பவுண்டரி

வெற்றியை தந்த பவுண்டரி

நியூசிலாந்தை விட இங்கிலாந்து ஏறக்குறைய 10 பவுண்டரிகள் அதிகமாக அடித்திருந்ததால், புதிய உலக சாம்பியனாக இங்கிலாந்து அறிவிக்கப்பட்டது. ஐசிசி விதியின் படி இதை ஏற்புடையது என்றாலும், பைனலுக்கு இந்த விதியை கொண்டு கோப்பைக்கான அணியை தேர்ந்தெடுப்பதா என்று கேள்விகள் எழுந்தன.

விதிமுறை சரியல்ல

விதிமுறை சரியல்ல

மேலும், இதுபோன்ற உலக சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் போட்டிகளில் இப்படி ஒரு விதி முறையை கடைபிடிப்பது சரியானதல்ல என்றும் வல்லுனர்களும், விமர்சகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐசிசி விதிமுறைகளை கட்டாயம் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

ரவி சாஸ்திரி கருத்து

ரவி சாஸ்திரி கருத்து

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியூசிலாந்து குறித்தும், அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்தும் தமது கருத்தினை கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் அதற்கான விவரத்தை வெளியிட்டுள்ளார்.

அமைதி, பெருந்தன்மை

அதில் அவர் கூறியிருப்பதாவது: வில்லியம்சனின் அமைதி,பெருந்தன்மை இந்த உலக கோப்பையில் மிகவும் சிறப்புமிக்கது. மேலும் அவரின் இந்த அமைதியான அணுகுமுறை மதிப்பிற்குரிய ஒன்றாகவும், போற்றப்பட வேண்டியதாகவும் உள்ளது.

சரிபாதி உரிமை

சரிபாதி உரிமை

இங்கிலாந்து கோப்பையை சொந்தம் கொண்டாடினாலும் அதில் சரிபாதி உரிமை நியூசிலாந்துக்கும் இருக்கின்றது என்பது தான் உண்மை. எங்களுக்குத் தெரியும் அந்த உலக கோப்பை உங்களுக்கும் சேர்ந்ததே. நீங்கள் Kane மட்டும் இல்லை. நீங்கள் Kane (Can என்கிற அர்த்தத்தில்) மற்றும் Able, god bless என்று பாராட்டியுள்ளார்.

பட்டியல் தயார்

பட்டியல் தயார்

இதே நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி தான், தற்போது பூதாகரமாக எழுந்து தோனியின் இடத்துக்கு வேட்டு வைக்க ஆரம்பித்திருக்கிறது. கேள்வி பட்டியலை வைத்துக் கொண்டு பிசிசிஐ அமைப்பானது கோலி மற்றும் ரவி சாஸ்திரி வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

Story first published: Wednesday, July 17, 2019, 17:27 [IST]
Other articles published on Jul 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+