அவங்களோட பொண்டாட்டிங்க இனி பேட்டிங், பவுலிங் பண்ணுவாங்க..! யாரை நக்கல் பண்றீங்க ரவி சாஸ்திரி?
Recommended Video
மும்பை: வீரர்களின் மனைவிகளும் விரைவில் பேட்டிங், பவுலிங் செய்வார்கள் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கிண்டலாக பதிலளித்தார்.
உலக கோப்பை முடிந்துவிட்டாலும், அதில் இந்திய அணியின் தோல்வி, 4ம் வரிசை விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பின்னர், பயிற்சியாளர் மாற்றம், வீரர்களுக்குள் கோஷ்டி மோதல் என செய்திகள் உலா வந்தன.
அடுத்ததாக கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே பிளவு, ஒற்றுமையின்மை என தகவல்கள் பரவின. இவை அனைத்திற்கும் ஒரு படி மேலே, பிசிசிஐ வீரர்களை அவர்களின் மனைவிகளோடு இருக்க அனுமதிக்கவில்லை.

வீரர்களின் மனைவிகள்
கடைசி ஓரிரு வாரங்கள் மட்டுமே உடனிருக்க அனுமதித்தனர். அதனால் வீரர்களுக்கும், அவர்களின் மனைவிகளுக்கும இடையே பிரச்சினை ஏற்பட்டு, மன உளைச்சலால் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றும் கதைகள் பரவின.

செய்தியாளர்களுக்கு பேட்டி
இந் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் பல கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

கேள்விகளுக்கு பதில்
அதில் வீரர்களின் மனைவிகளிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரவிசாஸ்திரி, முதலில் வீரர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் என்று கூறினர். பிறகு, மனைவிகளுக்கும், வீரர்களுக்கும் இடையே பிரச்சனை என்றனர்.

மனைவிகள் விளையாடுவார்கள்
ஆகையால், இனி போட்டிகளில் வீரர்கள் ஆட மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவிகளே பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வார்கள் என்று வதந்தி பரப்பி விடுவார்கள் என்று பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications