அவங்க வர மாட்டாங்க.. முக்கிய வீரர்கள் இல்லாமல் நடக்கப் போகும் பிரம்மாண்ட ஆசியா XI - உலக XI போட்டி!

மும்பை: தென்னாப்பிரிக்காவுடனான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் வங்கதேசம் மற்றும் இந்தியா நடத்தும் ஆசியா XI -உலக அணி XI போட்டிகளில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசியா XI -உலக அணி XI பங்கேற்கும் 3 போட்டிகளில் இரண்டு வங்கதேசத்திலும் ஒரு போட்டி இந்தியாவின் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் உலகின் மிக்பெரிய மைதானத்தில் இந்த தொடரின் 3வது போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில் இந்தியா -தென்னாப்பிரிக்கா ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்தியாவின் முக்கிய வீரர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

 வங்கதேசம், இந்தியா நடத்துகிறது

வங்கதேசம், இந்தியா நடத்துகிறது

ஆசியா XI -உலக அணி XI பங்கேற்கும் 3 போட்டிகளை கொண்ட தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரண்டு போட்டிகளை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் ஒரு போட்டியை இந்தியாவும் நடத்த திட்டமிட்டுள்ளது.

 சவுரவ் கங்குலி அறிவிப்பு

சவுரவ் கங்குலி அறிவிப்பு

குஜராத்தின் அகமதாபாத்தில் உலக அளவில் மிகபெரியதாக உருவாக்கப்பட்டு வரும் சர்தார் படேல் ஸ்டேடியத்தின் துவக்க விழாவையொட்டி, ஆசியா XI -உலக அணி XI தொடரின் இறுதிப்போட்டியை இங்கு நடத்தவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

 வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

ஆசியா அணியில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணி வீரர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி வீரர்களான, கோலி, தோனி, ரோகித் ஷர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனோஸ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

 இந்தியாவில் 3வது போட்டி

இந்தியாவில் 3வது போட்டி

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சர்தார் படேல் ஸ்டேடியமும் பிப்ரவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என்பதால் இதையடுத்து அகமதாபாத்திலும் மூன்றாவது போட்டி நடைபெறும்.

 ஒருநாள் சர்வதேச போட்டிகள்

ஒருநாள் சர்வதேச போட்டிகள்

இதனிடையே, தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா மோதும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மார்ச் 18ஐ ஒட்டி நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரையடுத்து இந்தியாவின் முன்னணி வீரர்கள், ஆசியா XI -உலக அணி XI தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Indian regular players not play in Asian XI -World XI series
Story first published: Sunday, December 8, 2019, 19:37 [IST]
Other articles published on Dec 8, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X