Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்காக ஒன்றிணைந்த இந்திய கிரிக்கெட்.. பகையை மறந்த கங்குலி.. ரோல் மாடல் என சச்சின் பாராட்டு

மொஹாலி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரும் 4ஆம் தேதி தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் மோதுகிறார்.

முதலில் பார்வையாளர்களை அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவித்த பிசிசிஐ பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விராட் கோலிக்கு இந்திய அணியின் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் வாழ்த்து

சச்சின் வாழ்த்து

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சச்சின், ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய போது தான் விராட் கோலி குறித்து முதலில் கேள்வி பட்டேன்.அனைவரும் அப்போது விராட் கோலி பற்றியே பேசினர். 100வது டெஸ்ட்க்கு வாழ்த்துக்கள். இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள், உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை என பாராட்டினார்.

கங்குலி வாழ்த்து

கங்குலி வாழ்த்து

கங்குலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், விராட் கோலி 10, 11 ஆண்டுகளுக்கு முன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஜூனியர் கிரிக்கெட்டிலிருந்து தொடங்கி இன்று பெரும் சாதனையை படைக்க உள்ளார். அவரது பயணம் மகத்தானது. பிசிசிஐ சார்பாகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்கிற முறையிலும் அவரை பாராட்டுகிறேன்.

டிராவிட் வாழ்த்து

டிராவிட் வாழ்த்து

டிராவிட் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்திய அணியை தனி ஆளாக தூக்கி நிறுத்தியவர் விராட் கோலி, கேப்டனாக 5, 6 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 100 டெஸ்ட் விளையாடி சராசரி 50க்கு மேல் வைத்திருப்பது எல்லாம் பெரும் சாதனை. விராட் கோலியின் உடல் தகுதியை பார்த்து சொல்கிறேன். அவர் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவார்.

சேவாக் பாராட்டு

சேவாக் பாராட்டு

சேவாக் வெளியிட்டுள்ள பதிவில், பண்டிகை என்றால் ஹோலி, பேட்டிங் என்றால் அது கோலி. உங்களுடைய சாதனையை நினைத்து தேசமே பெருமை கொள்கிறது என்று பாராட்டினார். கோலி இன்னும் 38 ரன்கள் அடித்தால் சர்வதேச டெஸ்டில் 8 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Wednesday, March 2, 2022, 21:37 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+