For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஆண்டில் 16 கோப்பை தவறவிட்ட இந்தியா.. ஆடவர் போல் மகளிர் அணியை துரத்தும் சாபம்.. முழு விவரம்

மும்பை : இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையில் வெல்லவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

ஆடவர் அணி எப்படி ஐசிசி தொடரில் தோற்கிறதோ அதேபோல் மகளிர் அணியும் கோப்பை அருகில் வரை வந்து வெற்றி வாய்ப்பை தவற விடுகிறார்கள். எப்படி ஆடவர் அணியில் விராட் கோலி ஐசிசி கோப்பை வாங்கவில்லை என்ற புகார் எழுந்ததோ,

அதேபோல் மகளிர் கிரிக்கெட்டிலும் ஹர்மன்பிரித் கவுர் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி தவறவிட்ட கோப்பைகளை தற்போது பார்க்கலாம் .

2014-15 தோல்வி

2014-15 தோல்வி

2014 ஆம் ஆண்டு ஆடவருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணி இலங்கையுடன் தோல்வியை தழுவியது. இதுபோன்று 2014 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி குரூப் ஸ்டேஜ்லே வெளியேறியது. இதனை அடுத்து நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.

2016-2017 தோல்வி

2016-2017 தோல்வி

இதன் பிறகு நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகளிர் இந்திய அணி குரூப் சுற்றிலே நடையை கட்டியது. அதை தருணத்தில் நடைபெற்ற ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது .இதன் பிறகு 2017 ஆம் ஆண்டு மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. அதே ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

2018-2020 தோல்வி

2018-2020 தோல்வி

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை வந்து தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணி 50 ஓவர் உலகக் கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவியது. இதன் பிறகு 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.

2021-22 தோல்வி

2021-22 தோல்வி

இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு குரூப் ஸ்டேஜ் பிரிவில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 2022 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி 50 உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜிலே தோல்வியை தழுவி வெளியேறியது. அதேபோன்று 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.

டி20 உலககோப்பை தோல்வி

டி20 உலககோப்பை தோல்வி

இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மகளிருக்கான டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்துடன் தோல்வியை தழுவியது. தற்போது 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி தழுவி இருக்கிறது. இந்திய அணிக்கு தற்போது மீண்டும் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடராகும் இந்த இரண்டிலாவது இந்திய அணி ஏதேனும் ஒன்றாவது வெல்ல வேண்டும் என்பது ரசிகரின் எதிர்பார்ப்பு.

Story first published: Friday, February 24, 2023, 17:01 [IST]
Other articles published on Feb 24, 2023
English summary
Indian mens and womens cricket team at ICC Tournaments for past 10 years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+