Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, கே எல் ராகுல் என அனுபவ பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் இந்திய அணி தடுமாறிய போது மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கான் கை கொடுத்தார். மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான் மூன்று அரைசதங்கள் அடித்தார்.

Indian National Cricket Team Dhruv Jurel Sarfaraz Khan get BCCI contracts

ரிஷப் பண்ட்டுக்கு பின் இந்திய டெஸ்ட் அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் கிடைக்காத நிலையில் துருவ் ஜுரேல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். மூன்று போட்டிகளிலும் பொறுப்பாக பேட்டிங் செய்ததோடு நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 90 மற்றும் 46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் துருவ் ஜுரேல்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் அவர்கள் இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. பிசிசிஐ விதிப்படி ஒரு வீரர் ஒரே ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டி அல்லது 8 ஒருநாள் போட்டி அல்லது 10 டி20 போட்டிகளில் ஆடி இருந்தால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் வழங்கப்படும். ஆனால், இதில் தேர்வுக் குழுவின் ஒப்புதலும், பிசிசிஐ உயர் அதிகாரிகள் கூட்டத்தின் ஒப்புதலும் அவசியம் ஆகும்.

அந்த வகையில் பிசிசிஐ கூட்டத்தில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேலுக்கு ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருவரும் பிசிசிஐ கிரேடு சி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அது மட்டுமின்றி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் அவர்களுக்கு அணித் தேர்வில் முக்கியத்துவம் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக இருந்த ரிஷப் பண்ட் விபத்துக்கு பின் சுமார் 16 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதன் பின் இப்போது தான் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். அவரால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா? ஐந்து நாட்கள் போட்டியின் குறைந்தது இரண்டு நாட்கள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டி இருக்கும். அந்த வேலைப்பளுவை அவரது உடல் ஏற்குமா? என்ற கேள்விகள் இருப்பதால் இப்போதைக்கு துருவ் ஜுரேல் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக மேலும் சில டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கக் கூடும்.

Story first published: Tuesday, March 19, 2024, 10:30 [IST]
Other articles published on Mar 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+